1000 விடுதலை சந்தாக்கள் திரட்டித் தரப்படும் திருப்பூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 16, 2022

1000 விடுதலை சந்தாக்கள் திரட்டித் தரப்படும் திருப்பூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம்

திருப்பூர், ஜூலை 16- திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக நிர்வாகிகள் கலந் துரையாடல் கூட்டம் 10.7.2022 அன்று மாலை 6.30 மணிக்கு திருப்பூர் பெரியார் புத்தக நிலை யத்தில் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் வெ.குமார ராஜா ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

மாநகர செயலாளர் பா.மா. கருணாகரன், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் கு.திலீபன், 

ப.வீரப்பன், அவிநாசி ப.க. பொரு ளாளர் சிவ.முத்துச் சரவணன், அவிநாசி ப.க. தலைவர் அ.இராம சாமி, திருப்பூர் ச.துரைமுருகன், இளைஞரணி பூ.குருவிஜயகாந்த், க.மைனர், திருப்பூர் மாநகர இளை ஞரணி தலைவர் பெ.செல்வராஜ், தி.முத்து ஆகியோர் பங்கேற்ற இக் கலந்துரையாடலில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை ஏற்று அதனைச் செயல்படுத்துவது என இக்கமிட்டி தீர்மானிக்கிறது.

2. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை' நாளிதழ் ஆசிரியராக 60 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதனை முன்னிட்டு தமிழ்நாடு தழுவிய அளவில் 60,000 விடுதலை சந்தாக் கள் திரட்டித் தருவது என முடி வெடுக்கப்பட்டுள்ளது. நமது திருப் பூர் கழக மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட 100. சந்தாக்களைத் திரட்டி வரும் 30.7.2022 அன்று அரியலூர் மாநாட்டில் தருவது என தீர்மா னிக்கப்படுகிறது.

3. வரும் ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டிற்கு தனி வாகனம் மூலம் திருப்பூர் மாவட்டக் கழகம் சார்பில் பெரும் திரளாக செல்வது எனவும், மாநாட்டை விளக்கி சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வது எனவும் இக் கமிட்டி முடிவெடுக்கப்படுகிறது.

4. எதிர்வரும் டிசம்பர் 2 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளை திருப்பூரில் சிறப்பாகக் கொண்டாட தலைமைக் கழகம் அனுமதி வழங்க வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது. 

No comments:

Post a Comment