பட்டப்படிப்பு தகுதிக்கு விமான ஆணையத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

பட்டப்படிப்பு தகுதிக்கு விமான ஆணையத்தில் பணியிடங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான முறையான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

இங்குள்ள காலிப் பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது காலியாக உள்ள Junior Executive பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: 

இந்திய விமான நிலைய ஆணையத்தில் Junior Executive எனும் பிரிவில் காலியாக பணியிடங்கள் உள்ளன. தற்போது மொத்தம் 400 இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பிஇ, பிடெக் படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேலாக முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். வயது எவ்வளவு? விண்ணப்பத்தாரர்களின் வயது 14.07.2022ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். அதிகபட்சமாக விண்ணப்பத்தாரர்கள் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். 

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயதும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 வயதும், பிடபிள்யூக்கு 10 வயதும் சலுகை உண்டு. 

இதற்கான விண்ணப்பத்தை www.aai.aero  எனும் இணையதளத்தில் Careers என்பதை கிளிக் செய்து இணையவழியில் ஜூன் 15 முதல் ஜூலை 14 வரை ஒரு மாத காலத்தில் விண்ணப்பம் செய்ய முடியும். விண்ணப்பம் கட்டணம் எதுவும் கிடையாது. 

விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ.1.40 லட்சமும் கிடைக்கும். 

மேலும் விவரங்களுக்கு... கூடுதல் விவரங்களை https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். 

மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட https://www.aai.aero/en/recruitment/release/268290 கிளிக் செய்து அறிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

No comments:

Post a Comment