எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

எல்லை பாதுகாப்புப் படையில் பணியிடங்கள்

இந்திய எல்லை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் காவல்துறையில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

12ஆம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.  

இந்திய பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இந்தோ-திபெத் காவல் படை(அய்டிபிபி) உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இது செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணம் ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையம் மூலம் https://recruitment.itbpolice.nic.in/  இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 7ஆம் தேதி கடைசி நாளாகும்.

No comments:

Post a Comment