சென்னையில் உள்ள உயர்நீதிமன்றம் மற்றும் மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அரசு வழக்காடல் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் சென்னை உயர்நீதிமன்றம், மதுரையில் உள்ள உயர்நீதிமன்றம் கிளைகளில் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்களின் வயது 01.07.2021 தேதி அடிப்படையில் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 32 வயதுக்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களின் இக்கல்வி தகுதி தேவையில்லை.
நான்கு சக்கர வாகனத்துக்கான உரிமம் பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். இவர்கள் அரசு சார் அமைப்பு வழங்கிய அடையாள சான்றிதழ் (கல்வி, ஜாதிச் சான்றிதழ்) நகல்களுடன் அரசிதழில் பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 அஞ்சல் தலையுடன் சுயமுகவரியிட்ட உறையுடன் அரசு தலைமை வழக் குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை 600 104''என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 17.06.2022ஆம் தேதி மாலை
5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1dP65_ZtnBonWLu57UKVbt1hVvE8s1iKj/view கிளிக் செய்து அறிந்து விண்ணப்பிக்கலாம்.

No comments:
Post a Comment