வீசி எறியப்பட்ட ஆஞ்சநேயர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

வீசி எறியப்பட்ட ஆஞ்சநேயர்கள்

சென்னை,ஜூன்15- பட்டினப்பாக்கம் கடற்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உட்பட 2 கற்சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. அந்த சிலைகளை வீசிச் சென்றது யார் என காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய காவலர் களான நவின் மற்றும் விமல் (ஓட்டுநர்) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ரோந்து வாகனத்தில் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதே பகுதி சீனிவாசபுரம், துலுக்கானத்தம்மன் கோயில் எதிரில் உள்ள கடற்கரையில் 2 கற்சிலைகள் ஒதுங்கியுள்ளன என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர் கரை ஒதுங்கிக் கிடந்த சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை, ஒன்றரை அடி உயரம் கொண்ட ராமானுஜர் போன்று உள்ள சிலை ஆகியவற்றை மீட்டனர். உடனடியாக அந்த சிலைகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டன.   மயிலாப்பூர் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப் பட்டவை; இவற்றை வீசிச் சென்றவர்கள் யார்? என பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வு செய்து எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் என கண்டறிவார்கள் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தோர் மீட்பு: உணவுத் துறை அமைச்சரின் மனிதநேயம்

திண்டுக்கல்,ஜூன்15- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் சிக்கி தவித்தவரை உணவு துறை அமைச்சர் சக்கரபாணி காப்பாற்றினார். திருப்பூர் மாவட்டம் திருமுகம் பூண்டியை சேர்ந்த வேல்முகன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற திருமணம் விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

தாராபுரம் சாலையில் கார் சென்ற போது கார் திடீரென தீப்பிடித்தது. இதனால் காரில் சிக்கிய 2 பேரும் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தபோது அவ்வழியாக சென்ற உணவு துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அவருடன் சென்றவர்கள் சற்றும் தாமதிக்காமல் காரில் இருந்தவரை மீட்டனர். தொடர்ந்து வேறொரு காரை வரவைத்து அவர்களை அமைச்சர் அனுப்பிவைத்தார். சாலையில் திடீரென தீப்பிடித்த காரில் சிக்கி தவித்த தங்களை சற்றும் தாமதிக்காமல் காப்பாற்றிய அமைச்சருக்கு அவர்கள் நன்றிதெரிவித்தனர். 

தமிழ்நாட்டில் புதிதாக 332 பேருக்கு கரோனா

சென்னை, ஜூன் 15 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 194, பெண்கள் 138 என மொத்தம் 332 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென் னையில் 171 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,969 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 18,312 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று (14.6.2022) மட்டும் 153பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,632 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் உயிரிழப்பு இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 255 ஆகவும், சென்னையில் 127 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும் போது, தமிழ் நாட்டில் கரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது. 

இந்தியாவில் முன்னதாக, நேற்று காலை நேர நிலவரப் படி புதிதாக 6,594 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது. 50,548 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 4,035 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 195.35 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment