திருச்சி, ஜூன் 15 வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்லிடப்பேசி எடுத்து வர அனுமதி கிடையாது. மீறினால், அலைபேசி பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்லிடப்பேசி எடுத்து வர அனுமதி கிடையாது. மீறினால், மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் - செல்லிடப்பேசி திரும்ப வழங்கப்படமாட்டாது. 2 ஆண்டாக இணைய வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித் துள்ளது.
அதை சரி செய்வதற்காக அவர் களது மனதுக்கும், மூளைக்கும் புத்துணர்வு, உற்சாகம் வழங்கிய பிறகு தான் வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அய்ந்து நாட்கள் தன்னார்வளர்கள், காவல்துறையினர் வகுப்பு எடுப்பர். தனியார் பள்ளிகள், புத்தகம், சீரு டைகளை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு விரைவில் ஊசி போடப்படும். தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்காமல் இருக்கக்கூடாது.
அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. இரவு 12.30 மணி வரை காத்திருந்து அரசுப் பள்ளியில் சேர்க்கும் நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. வரும் மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்படும். 9,494 ஆசிரி யர்களை இந்த ஆண்டு எடுக்க இந்த ஆணையம் மூலம் அட்ட வணை வெளியிட்டுள்ளோம். பள்ளிகள் செயல்பட துவங்கியதால் படிப்படியாக இல்லம் தேடி கல்வித் திட்டம் நிறுத்தப்படும். நீட் ரத்து தொடர்பாக முதலமைச்சர் எடுத்துள்ள சட்டப்போராட்டம் வெற்றி பெறும். கண்டிப்பாக நீட் ரத்தாகும் என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment