நெடுஞ்சாலைத்துறையில் பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதி: நடைமுறை மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

நெடுஞ்சாலைத்துறையில் பணியாளர்கள் ஓய்வுபெற அனுமதி: நடைமுறை மாற்றம்

சென்னை, ஜூன் 15  நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறி யாளர் சந்திரசேகர் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பணியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு மற்றும் சுய விருப்ப ஓய்வு நேர்வுகளில் தடையின்மைச் சான்றுகளை துறைத் தலைவர் என்ற முறையில் இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் சென்னை அலுவலகத்தில் பெறப்பட்டு உரிய வழிமுறையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தற்போது, முதன்மை இயக்குநர் கடிதத்தில், முதன்மை இயக்குநர் நியமன அதிகாரியாக இல்லாத பணி நிலைகளில், இந்த சாலை பணி யாளர்கள், திறன்மிகு உதவியா ளர்கள், ஓட்டுநர்கள், காவலர்கள் மற்றும் பதிவுரு எழுத்தர்களுக்கு தனியர்கள் குறித்த ஏதேனும் குற்ற வழக்குகள், புகார்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டம், கோட்டம், வட்ட பொறியாளர்கள் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டா லேயன்றி யாதொரு தகவலும் இந்த அலுவலகத்தில் இருக்காது. 

இந்த தனியர்கள் குறித்த எந்த ஒரு பிரேரணை மீதான நடவடிக்கை மற்றும் தடையின்மைச் சான்று வழங்குவது முற்றிலும் முரணான நடவடிக்கையாக இருக்கும்.

முதன்மை இயக்குநர் ஆகியோர் நியமன அதிகாரிகளாக இல்லாத பணிநிலைகள் அனைத்திற்கும் தங்கள் அளவிலேயே முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

எனவே, முதன்மை இயக்குநர் தனது கடிதத்தில் குறிப் பிட்டுள்ளது போலவே, தலைமை பொறியாளர் அலுவலகத்திலும் இந்த பணியாளர்கள் குறித்த ஏதேனும் குற்ற வழக்குகள், புகார்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்ட  மற்றும் கோட்ட மற்றும்  வட்ட அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டாலேயன்றி யாதொரு தகவலும் இந்த அலுவலகத்தில் இருக்காது.

இந்நிலையில் தனியர்கள் குறித்த எந்த ஒரு பிரேரணை மீதான நடவடிக்கை மற்றும் தடையின்மைச் சான்றுகள் குறித்த கருத்துருக்களை இனிவரும் காலங்களின் உரிய நேர்வுகளில் முறையாக ஆய்வு செய்து பணிநியமன அலுவலர் என்ற  நிலையில் தங்கள் அளவிலேயே தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் கேட்டுக்கொள் ளப்படுகின்றனர்.


No comments:

Post a Comment