50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை கொண்டு வரும் வெளிநாட்டுப் பயணிகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை கொண்டு வரும் வெளிநாட்டுப் பயணிகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 15  வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான  தங்கம், வெள்ளி பொருட்களை இந்தியா விற்குள் எடுத்து வரும்போது அதற்கான  உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சந்திரசேகரம் விஜயசுந்தரம் அவரின் மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை வந்தனர்.  ஆன்மிக சுற்றுலாவிற்கு இந்தியா வந்த இவர்கள் 43 லட்சத்து 90 ஆயிரத்து 754 ரூபாய் மதிப்பிலான 1,594 கிராம் தங்க நகைகளை அணிந்தும் வந்துள்ளனர்.

மேலும், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 112  வெளிநாட்டு மதுபான பாட்டில் களையும் எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர் களை தடுத்த சுங்க துறை அதி காரிகள் சந்திரசேகரம் விஜயசுந்தரம் உள்ளிட்டோர்க்கு அபராதம் விதித்தனர். இதனை எதிர்த்து சந்திரசேகரம் விஜயசுந்தரம் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசார ணைக்கு வந்தது. அப்போது மனு தரார் சார்பாக வழக்குரைஞர் ஆஜரானார்.

அவரின் வாதத்தை  ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாட்டினர் உட மைகள் விதி 1998ன்படியின் கீழ் கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதன்  பிறகு 2016ஆம் ஆண்டு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டது. 

அதன்படி  வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளின்  மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த  வேண்டும். அது குறித்த உறுதிமொழியையும் கொடுக்க வேண்டும். மனுதாரர்கள்  ஆன்மிக சுற்றுலாவிற்காக இந்தியா வந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் அப்படி  வரும்போது இவ்வளவு நகைகள், மதுபாட்டில்கள் கொண்டு வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அளவிற்கான பொருள்கள் எடுத்து வருவது வணிக  ரீதியாக இருக்கலாம் அல்லது அன்பளிப்பாக மற்றவர் களுக்கு அளிப்பதற்காக  இருக்கலாம். 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான பொருள்களை எடுத்து வரும்  போது அதற்கான உறுதி மொழியை சம்மந்தபட்டவர்கள் சுங்க துறையிடம் அளிக்க  வேண்டும். இந்த வழக்கில் சுங்க வரித்துறை உத்தரவில் எந்தவிதமான தவறும்  இல்லை. அதனால், இதில் தலையிட தேவையில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது  என்று உத்தர விட்டார்.

No comments:

Post a Comment