சென்னை, ஜூன் 15 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை ரூ.2,877 கோடியில் தொழில் நுட்ப மய்யங்களாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (14.6.2022) தலைமை செயலகத் தில், தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக் கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக் கும் இடையே மேற்கொள்ளப் பட்டது.
அப்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செய லாளர் இறையன்பு, தொழி லாளர் நலத்துறை செயலாளர் முகமது நசிமுதின், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் வீரராகவ ராவ், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் ராமதுரை, தலைமை நிதி அலுவலர் சவிதா பால சந்திரன், தலைவர் சுசீல்குமார், மனிதவள மேலாண்மை தலைவர் பவன்பகேரியா, கல்வி மற்றும் திறன் மேம்பாடு இயக்குனர் புஷ்கராஜ்கால்குட் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில், தற்போது 71 அரசு தொழிற் பயிற்சி நிலை யங்களை தொழில் 4.0 தரத்தி லான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில் நுட்ப மய்யங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவ னத்திற்கும் இடையே புரிந் துணர்வு ஒப்பந்தம் கையெழுத் தானது.
இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய இயந் திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட் கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில் நுட்ப மய்யங்களாக மாற்றப்பட உள்ளன.
இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாண வர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடு களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப் படும் வாய்ப்புகள் ஏற்படும்.
மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியா ளர்கள் ஆகியோர்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

No comments:
Post a Comment