அய்டிபிஅய் வங்கியில் ஏராளமான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாத ஊதியம் ரூ.36 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்ய ஜூன் 17 கடைசிநாளாகும்.
இந்த வங்கியில் எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் என மொத்தம் 1,544 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுதொடர்பான முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பின் முக்கிய விவரங்கள் வருமாறு: அய்டிபிஅய் வங்கியில் மொத்தம் 1,544 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 1044 இடங்கள் எக்ஸிகியூட்டிவ் (அதிகாரி)பணியிடங்களாகும். இந்த பணியில் சேர விரும்புவர்கள் 01.04.2022இன் படி குறைந்தபட்சம் 20 வயதும், அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மீதமுள்ள 500 இடங்கள் Assistant Man பணியிடங்களாகும். இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் 01.04.2022ஆம் தேதிப்படி குறைந்தபட்சம் 21 வயதும், அதிகபட்சமாக 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு மாத சம்பளமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு www.idbibank.in இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100, எஸ்டி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் இணைய வழி மூலம் நடக்கும் எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பம் செய்ய ஜூன் மாதம் 17ஆம் தேதி கடைசிநாளாகும்.
ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பம்: மேலும் எக்ஸிகியூட்டிவ் அல்லது துணை மேலாளர் ஆகிய பணியில் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே ஒருவர் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அய்டிபிஅய் வங்கி தெரிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அது திருப்பித் தரப்பட மாட்டாது என்றும் அய்டிபிஅய் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பணி நியமன முறைகளில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment