செஞ்சி பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநில மாநாட்டில் பெருவாரியாக பங்கேற்க ஆத்தூர் மாவட்டம் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

செஞ்சி பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநில மாநாட்டில் பெருவாரியாக பங்கேற்க ஆத்தூர் மாவட்டம் தீர்மானம்

ஆத்தூர், ஜூன் 12- சேலம் ஆத்தூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிறப் பாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் அ.அறிவுச் செல்வம் வரவேற்புரையாற்றினார். பகுத்தறிவு ஆசிரியர் அணி ஒன்றிய அமைப்பாளர் பழனிவேல் பகுத் தறிவு பாடல்களை பாடி கலந்து ரையாடல் கூட்டத்தை துவக்கி வைத்தார். 

பகுத்தறிவாளர் கழகம் பகுத்த றிவு ஆசிரியர் அணி கலந்துரை யாடல் கூட்டத்திற்கு பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல், கழக மண்டல செயலாளர் விடு தலை சந்திரன், மாவட்ட தலைவர் த.வானவில், மாவட்டச் செயலா ளர் நீ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் முக்கிய பொருளாக இளைஞரணி, மாணவர் கழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தோழர்களை பாராட்டி பயனாடை அணிவிக்கப் பட்டது. மேலும் செஞ்சியில் ஜூன் 19 நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா மாநில மாநாட் டின் சிறப்பு அம்சங்கள் பற்றி பகுத் தறிவு ஆசிரியர் அணி மாநிலத் தலைவர் வா.தமிழ் பிரபாகரன் சிறப்பாக எடுத்துரைத்தார். 

அதனை தொடர்ந்து பகுத்தறி வாளர் கழக பொன்விழா மாநில மாநாட்டிற்கு ஆத்தூர் மாவட்டத் தில் இருந்து பெருவாரியாக தோழர்கள் கலந்து கொள்வது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்களை மாணவர் கழகத் தோழர் விக்னேஷ் வாசித் தார். கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பேசும்பொழுது பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் நடத்திய கடந்த கால மாநாடுகள், அம்மாநாட்டின் மூலம் கண்ட வெற்றிகள், பகுத்தறிவாளர் கழகத் தின் செயல்பாடுகள், தோழர்கள் எவ்வாறு பகுத்தறிவாளர் கழகத் தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றுதல் போன்ற பல்வேறு கருத்துகளை தனது உணர்ச்சிமிக்க பேச்சாற்றலால் எடுத்துரைத்தார். கருத்தரங்கு போல் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழக மாவட்ட அமைப்பாளர் கோபி இமயவரம்பன்,  கழக பொறுப்பா ளர்கள் மருத.பழனிவேல், சுரேஷ், சைக்கிள் மணி, நல்லசிவம், மண் டல இளைஞரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் கார்முகிலன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் பரமேஸ்வரன், வாழப்பாடி ஒன்றிய இளைஞரணி அமைப்பா ளர் சத்தியமூர்த்தி, மாவட்ட மாண வர் கழகத் தலைவர் அழகுவேல், மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர் அஜித், பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப் பாளர் மாயக்கண்ணன் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment