தஞ்சாவூர், ஜூன் 12-- பெரியார் பேசு கிறார் -தொடர் 70, புரட்சிக் கவிஞர் 132 ஆவது பிறந்த நாள் விழா, முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் 99 ஆவது பிறந்த நாள் விழா சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர், கீழராஜவீதி, பெரியார் இல்லத்தில் 4.6.2022, அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நல்லாசி ரியர் இள.மாதவன் தலைமை யேற்று உரையாற்றினார். கழ கப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த் தன், மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட ஊரட்சிக் குழுத் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, முத்தமிழறிஞர் டாக் டர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து உரையாற்றி னார், தஞ்சை ஒன்றியக்குழு பெருந்தலைவர் வைஜெயந்தி மாலா கேசவன், புரட்சிக் கவி ஞர் பாரதிதாசன் படத்தினை திறந்துவைத்து உரையாற்றி னார்.
தந்தை பெரியார் போற் றிட்ட புரட்சிக்கவிஞர் என்ற தலைப்பில் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தந்தை பெரியார் புகழ்ந்திட்ட டாக் டர் கலைஞர் என்ற தலைப்பில் மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதி ரடி க.அன்பழகன் சிறப்புரை யாற்றினர்.
மாநில பகுத்தறிவாளர் கழ கத் துணைத் தலைவர் கோபு.பழனிவேல் நிகழ்வினை ஒருங் கிணைத்து உரையாற்றினார்.
கூட்டத்திற்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா.மனோகரன் வர வேற்புரையாற்றினார். இறுதி யாக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜெ. பெரியார்கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, செய லாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட கலை இலக்கியணி தலைவர் வெ.நாராயணசாமி, மாநகர தலைவர் பா.நரேந்தி ரன், செயலாளர் கரந்தை அ. டேவிட், மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் பெரியார் நகர் அ.உத்திராபதி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணி தலைவர் ந.சங்கர், ஒன்றிய ப.க.அமைப்பாளர் களிமேடு அன்பழகன், மாவட்ட தொழி லாளரணி தலைவர் செ.ஏகாம் பரம், சி.நாகநாதன், மாநகர இளைஞரணி துணை தலைவர் சி.பெரியார்செல்வம், விசிறி சாமியார் முருகன், இரா.மகா லிங்கம், நா.ராமையன், அ.குழந் தைசாமி, கோ.கேசவன், சு.இராஜ சேகரன், ஜி.ஹரிகிருஷ்ணன், ச.செங்குட்டுவன், சி.முருகன், சாலியமங்கலம் துரை. அண்ணா துரை, எம்.பி.நாத்திகன், சுப.சரவணன், ஆர்.சாமிநாதன், மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment