குடந்தை, ஜூன் 12- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசத்தில் 08-06-2022 புதன்கிழமையன்று பெரியார் நகர்வு புத்தக சந்தை எழுச்சியுடன் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர், மாநிலங் களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் புத்தக விற்பனையை தொடங்கி வைத்து சிறப்பித்தார். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் முதல் விற்பனை புத்தகங்களை பெற்றுக்கொண்டார்.
புத்தக சந்தை பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம் தலைமையில், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் மோகன், தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி, மாவட்டத் தலைவர் நிம்மதி, மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் திருஞானசம்பந்தம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் உறவழகன், திமுக மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு, ஒன்றிய செயலாளர் நாசர், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இராஜப்பா மற்றும் பாபநாசம் ஒன்றிய கழக தோழர்கள் சரவணன், லெனின் பாஸ்கர், ராஜராஜன், பெரியார் கண்ணன், சேகர்,நாகராஜ், முத்துராஜா, அறிவழகன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்களும், தோழமை கட்சி பொறுப் பாளர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை நகர செயலாளர் வீரமணி வரவேற்றும் நகர தலைவர் இளங்கோவன் நன்றியும் கூறினர். பொதுமக்கள் பேராதரவுடன் ரூ.20,320/- க்கு புத்தகங்கள் விற்கபட்டது.

No comments:
Post a Comment