கரூர் பெரியார் நகர்வு புத்தக ஊர்தியில் விற்பனை தொடங்கியது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

கரூர் பெரியார் நகர்வு புத்தக ஊர்தியில் விற்பனை தொடங்கியது

கரூர், ஜூன் 21- கரூர் 18.6.2022 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு பெரியார் நகர்வு புத்தக ஊர்தியில் புத்தக விற்ப னையை கரூர் மாவட்ட கழகத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் சே, அன்பு முதல் விற் பனை பிரதியை திமுக தொழிற்சங்க தலைவர் கண்ணதாசன் பெற்றுக் கொண்டார் . 

கரூர் மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி பிரிவு தலைவர் குடியரசு அவர் கள் புத்தகம் பெற்றுக் கொண்டார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் மாவட்ட செயலா ளர் ஜோதிபாசு அவர்க ளும் பெற்றுக் கொண் டார் நிகழ்வில் மாவட்ட செயலாளர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாவட்டத் துணைச் செயலாளர் வே, ராஜு, கரூர் நகர தலைவர் க.நா.சதாசிவம் மாவட்ட ஆசிரியர் அணி தலைவர் ராமசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காந்தி கிராமம் குமார், கிருஷ்ண ராயபுரம் ஒன்றிய தலை வர் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு புத்தக விற்ப னையை தொடங்கி வைத் தனர்.


No comments:

Post a Comment