குற்றாலத்தில் பெரியாரியல் பேரருவியில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

குற்றாலத்தில் பெரியாரியல் பேரருவியில் குளித்து மகிழ்ந்த மாணவர்கள்!

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 2022 ஜூன் 8, 9, 10, 11 ஆகிய நான்கு நாட்கள் வள்ளல் விகேஎன் மாளிகையில் நடைபெற்றது எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இளம் தோழர்கள் 120 பேர்  கட்டுப்பாடு மிக்கவர்களாக பங்கேற்றனர். கொள்கை பயிற்சியில் குன்றா ஆர்வத்துடன் அவர் களின் பங்கேற்பு இருந்தது. பொறியியல் பட்டம் முடித்த பல பட்டதாரிகள் மேல்நிலை உயர்நிலை பள்ளி மாணவர்கள் பலர். இவர்களில் குற்றாலத்தில் சாரல் மழை இருந்ததோ இல்லையோ பெரியாரின் கொள் கைச் சாரல் மாணவர்களை நனைத்தது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை விளம்பரப்படுத்தும் வகையில் கழகக் கொடிகள் வழி எங்கும் பட்டொளி வீசிப் பறந்தன ஆண்களும் பெண்களுமாய் கழகத் தோழர் கள் பார்வையாளர்களாக பலர் முகாமில் பங்கேற்றனர். 8.6.2022 காலை ஒன்பது முப்பது மணிக்கு பயிற்சி மாண வர்களின் பதிவு தொடங்கியது தொடர்ந்து தொடக்க நிகழ்வும்நடந்தது.

பெரியாரியல் வகுப்புகள்:

பயிற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் இந்துத்துவா எனும் தலைப்பில் இலகுவாக மாணவர்கள். புரிந்து கொள்ளும் வண்ணம் வகுப்பினை நடத்தினார் மாணவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை சில கேள்விகள் எழுப்பி மாணவர்களின் பதிலை கொண்டு உறுதிப்படுத்திக் கொண்டார். இன்றைய இந்திய துணைக்கண்ட அரசியலில் உறுதிமிக்க சொல்லாக பலரால் பேசப்படும் சொல்லாக அமைந்துள்ள திராவிட மாடல் பற்றிய தலைப்பை மிகவும் சிறப்பாக இளம் தோழர்கள் எளிமையாக உள்வாங்கும் வண்ணம் வகுப்பாக்கி தந்தார். மாணவர்கள் புரிந்து கொண்டார் களா என்பதை தாம் பேசிய கருத்தை திரும்ப எடுத்துச் சொல்ல க்கோரி னார். அட்சரம் பிசகாமல் மாணவர்கள் கூறியபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது தமிழர் தலைவரின் கடைசி வகுப்பு கேள்வியும் பதிலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நகைச்சுவை யோடும் உணர்ச்சி பூர்வமாகவும் தெளிந்த பதிலை வழங்கினார் தெரியாதனவற்றை தெரிந்து கொண்ட வர்களாக மனதில் எழுந்த சந்தேகங்களை போக்கி கொண்டவர்களாக மாணவர்கள் மாறினர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு திராவிடர் கழக வரலாறு தமிழர் தலைவரின் தனித் தன்மைகள் ஆகிய தலைப்புகளிலும், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்க வரலாறு ஜாதி ஒழிப்புப் போர் புராண இதிகாச வேத புரட்டுகள் எனும் தலைப்புகளிலும் கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு ஏன்? என்னும் தலைப்பிலும் கழகப் பொருளாளர் குமரேசன் மதவாத அரசியல் பற்றியும் கழக வெளியுறவு செயலாளர் கருணாநிதி வகுப்புரிமை வரலாறு சமூக நீதிக்கான சவால்கள் என்னும் தலைப்பு களிலும் பேராசிரியர் கண்மணி பெரியார் பேணிய பெண்ணியம் பற்றியும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர் நேரு மூடநம்பிக்கைகள் வளர்ச்சிக்கு தடை பற்றியும் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி திராவிடம் ஏன்? எனும் தலைப்பிலும் மருத்துவர் அணி பொறுப்பாளர் டாக்டர் கவுதமன் நாத்திகமும் மருத்துவமும் என்னும் தலைப்பிலும் பேராசிரியர் திருநீலகண்டன் திராவிட இயக்கமும் ஜாதி உடைப்பும் பற்றியும் முனைவர் நல்லசிவன் பெரியாரின் இன்றைய தேவை குறித்தும் முனைவர் எழிலரசன் திராவிட இயக்கத்தின் தமிழ் தொண்டு எனும் தலைப்பிலும் கழகம் கண்ட களங்கள் எனும் தலைப்பில் கிராமப்புற பிரச்சார குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அதிரடி அன்பழகனும் திராவிட மாணவர் கழக செய லாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் திரிபுவாதங் களுக்கு பதிலடி அறிவியலும் பகுத்தறிவும் ஆகிய தலைப்புகளிலும் வகுப்புகளை மிகவும் சிறப்பாக நடத்தினர் சமூக ஊடக பயிற்சி இணையத்தில் நமது பங்கு குறித்து எழுத்தாளர் வில்வம், பிரின்சு, உடுமலை ஆகியோர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் ஒரு சிலரை தவிர மாணவர்கள் அனைவரும் கருஞ்சட்டையுடன் காட்சியளித்தது சிறப்பு காலை 9 மணிக்கு தொடங்கிடும் வகுப்புகள் இரவு 9 வரை நீண்டதும் உண்டு. மாணவர்கள் அயராமல் வகுப்பு சிறப்புடன் நடைபெற ஒத்துழைத்தனர். குறும்படம் ,ஆவணப்படம் பெரியார் திரைப்படம், ஒளிபரப்பப்பட்டது.

பரபரப்பான பட்டிமன்றம்

10.6.2022 அன்று இரவு மாணவர்களின் பேச்சு பயிற்சிக்காக பால் ராசேந்திரம் அவர்களை நடுவராக கொண்டு பரபரப்பான பட்டிமன்றம் நடைபெற்றது தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது பகுத் தறிவா? இன நலனா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது மதுரை ஆதித்யா லியானார்டோ டாவின்சி திருச்சி கோகுல்ராஜ் காரைக்கால் வேல் முருகன் திண்டுக்கல் கமல் குமார் காரைக்கால் மோகன் ராஜ் ஈரோடு செந்தில்குமார் ஆகியோர் பட்டிமன்றத்தில் இரு அணிகளிலும் வாதிட்டனர் இன நலனே அய்யா வின் தொண்டில் விஞ்சி நிற்பது என்று நடுவர் தீர்ப் பளித்தார் .மற்றும் மாணவர்கள் மதுரை மகாமதி, மதுரை திவ்ய தர்ஷினி ,தேனி உதயநிதி, ஒரத்தநாடு ஆதவன், புதுவை தமிழ்பிரியன் சென்னை தொண் டறம்,

மாணவர்களுக்கு பரிசுகள் திண்டுக்கல் தீபன் ராஜ், விருத்தாசலம் இளங்கோவன், நாமக்கல் தமிழ்மதி, மதுரை நாத்திகா, புதுக்கோட்டை இனியன் ,புதுச்சேரி சசிகுமார் மாணவர்களுக்கு பரிசுகள் பேச்சு பயிற்சியில் பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாவலர் உரையுடன் கூடிய திருக்குறள் நூல் பரிசாக பட்டுக்கோட்டை ரத்தினசபாபதி வழங்கினார் சிறப்பாக குறிப்புகள் எழுதிய மாணவர்களுக்கு திருச்சி மேனாள் காவலர் பிச்சை என்கிற தமிழ்ச்சுடர் நூல்களை பரிசாக வழங்கினார் சிவபாரதி முதல் பரிசும் மதுரை மகாமதி இரண்டாம் பரிசும் கன்னியாகுமரி திலக ஜோதி மூன்றாம் பரிசும் பெற்றனர் ஈரோடு மெய்யரசன், மதுரை திவ்ய தர்ஷினி ,நாமக்கல் தமிழ்மதி, கோபி பிரசாந்த், திருச்சி லத்தீஸ்வரன் ஆகியோர் ஆறுதல் பரிசினை பெற்றனர். பெரியாரியல் ஒரு வாழ்க்கை நெறி .மனித வாழ்வை வளப்படுத்தும் வாழ்வியல் தத்துவம். பெரியாரியல் மனித சமுதாயத்தின் மாற்றத்தின் அடை யாளம். எழுச்சியின் பிரதிபலிப்பு .சமத்துவ வாய்ப்பு சமுதாயத்தில் நிலைபெற வேண்டும் எனும் அக்கறை யின் சின்னம். அறிவார்ந்த சமுதாயத்தை சமைத்திட வேண்டும் எனும் அறிவாயுதம் .அறியாமையை, பழமையை, ஜாதியை, மூடநம்பிக்கைகளை முறியடித்து சுயமரியாதை சமுதாயத்தை படைத்திடும் பெரியாரின் நெறி .இவ்வளவு சிறப்புவாய்ந்த பெரியாரியல் எனும் பெரியாரின் தத்துவத்தை இளம் சமுதாய வீரர்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக, நல்ல பயிற் சியை இந்த பயிற்சிப் பட்டறை ஏற்படுத்துகிறது. தங் களுக்கு கிடைப்பதற்கரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக பல மாணவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். சிலர் ஏனோ தானோ என்ற நோக்கில் நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக இங்கு வந்தோம். ஓரிரு வகுப் புகளை கவனித்த பிறகு கழக நிர்வாகிகள் காட்டிய அக்கறையை பார்த்தபோது இப்படியும் ஒரு இயக்கமா பெரியார் கொள்கை இவ்வளவு சிறப்பு வாய்ந்த தா நாமும் சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் உதவ வேண்டும் என்றால் இந்த இயக்கமே சிறந்த இயக்கம் என்ற உணர்வினை பெற்றோம் எங்களை மனிதர்கள் ஆக்கிய பயிற்சி பட்டறைக்கு நன்றி என்றனர். இதுநாள் வரை நாங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் பார்த்தது இல்லை இப்போதுதான் பார்க்கிறோம் எத்தனை பெரிய தலைவர் இவ்வளவு எளிமையாக இளைஞர்களுடன் மாணவர்களுடன் வாஞ்சையுடன் பழகுகிறார் என்று கண்டபிறகு வியந்தோம். காணா ததை கண்டோம். எல்லாமும் பெற்றோம் என்ற உணர்வே எங்கள் உள்ளத்தில் மேலிட்டுள்ளது என்றனர் சிலர்.  ஜாதிய ஒடுக்கு முறையால் மதவெறி யால் நமது சமுதாயம் பாழ் பட்டுவிடக் கூடாது. கொடு மையை தவிர்த்து பகுத்தறிவால் ஓங்க செய்வதற்காக சமூக நீதி சமநீதி பெறுவதற்காக பெண் விடுதலை ஆண் பெண் சமத்துவம் பேணப்படுவதற்காக ஓயாது உழைக்கும் உன்னத இயக்கம் திராவிடர் கழகம் தன் போக்கில் இளைய சமுதாயத்தை பகுத்தறிவு பாதையில் பயணிக்க செய்வதற்காக இப்படிப்பட்ட பட்டறைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது குற்றாலத்தில் மட்டும் நாற்பத்தி மூன்றாவது ஆண்டாக இந்த பட்டறை. இப்படியாய் நாடு முழுக்க ஒகேனக்கல் ,ஏலகிரி,குன்னூர், சிறுமலை ,புதுச்சேரி, கல்வராயன் மலை ,சென்னை, திருச்சி ,தஞ்சை என பல இடங்களில் பயிற்சிப் பட்டறைகளை தமிழர் தலைவரின் கட்டளைப்படி நடத்தப்பட்டு வருகிறது .

இவை தவிர மாவட்டம்தோறும் முக்கிய இடங்களில் ஒருநாள் பயிலரங்குகள் தனியே நடத்தப்படுகிறது. அடுக்கடுக்கான இயக்க பணிகளுக்கு இடையே பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கு வாய்ப்பளிக்கும் தமிழர் தலைவருக்கும், உடனடியாக தலைவரின் கட்ட ளையை செயல்படுத்தும் கழக நிர்வாகிகளுக்கும், பட்ட றையில் பங்கேற்று பயிற்சி வகுப்புகளை நடத்தும் பேராசிரியர் பெருமக்களுக்கும், ஆர்வத்துடன் குதூ கலித்து பங்கேற்கும் மாணவர்களுக்கும், கழக களப் பணியாளர்களுக்கும் நன்றிகள் கோடி..... 

குற்றாலத்தில் சாரல் மழை வராமல் போகலாம். பெரியாரின் கொள்கைச்சாரலுக்கு குறைவே இல்லை...... கொண்டுபோய் சேர்ப்போம் பெரியாரின் கொள்கையை எட்டுத்திக்கும் கொள்கை வீரர்களே, இளம் தோழர் களே, துப்பாக்கியில் இருந்து வெளிப்படும் தோட்டாக் களை போல் வேகமாக செயல்பட ஆயத்தமாவோம் வாருங்கள்!

No comments:

Post a Comment