'நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு' நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

'நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு' நூல் வெளியீடு

நெடுவாசல், ஜூன் 1- மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் ஆசிரியர் சி.வேலு  எழுதிய "நெடுவாசல் கிராம சமுதாய வரலாறு" நூல் வெளியீட்டு விழா 29.5.2022 அன்று மாலை 6 மணியளவில் நெடு வாசல் சட்டமன்ற உறுப் பினர் எஸ்.பி.முத்துக்குமரன்  நினைவரங்கத்தில் நடைபெற்றது. 

தமிழக ஆசிரியர் கூட்டணி மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் அண்ணாமலை  தலைமை வகித்து உரையாற்றினார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன், தஞ்சை தமிழ் பல் கலைகழக பேராசிரியர் காமராசு ஆகியோர் நூலின் மதிப்புரையாற்றினார்கள். 

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்  நூலினை வெளியிட்டு உரையாற்றினார், 

மாவட்ட ஆட்சியர் (ஓய்வு) அன்புசெல்வன்  நூலினை பெற்றுகொண்டு உரையாற்றினார்.  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்திய மூர்த்தி, திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினார்கள். 

முன்னதாக ஆசிரியர் சி.வேலு அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார் விவேகானந்தன் இறுதியாக நன்றி கூறினார். 

திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பேரா வூரணி வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிளைத்து நடத்தினார்கள். திரா விடர் கழக கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்கள் கோபு. பழனிவேல், கவிஞர் புயல்குமார், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அ.உத்தி ராபதி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த் தன்,  கழக பேச்சாளர் மாங்காடு மணியரசன், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மன்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி, தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன் னரசு, மதுரை புறநகர் மாவட்ட ப.க செயலாளர் பால்ராசு, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ஆசிரியர் எழிலரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலசுப்ரமணியன், பேரா வூரணி கவிஞர் மோகன், மாவட்ட அமைப்பாளர் சோம நீலகண்டன், சேதுபாசத்திரம் இளைஞரணி தலைவர் வசி, செயலாளர் சந்தோஷ், பேராவூரணி சந்திரமோகன், மதியழகன், ஆசிரியர் வேலு அவர்களின் வாழ்வினையர் தமிழ்மணி உள்ளிட்ட நெடுவாசல் ஊர்பொதுமக்கள், தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், சான்றோர் பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பித்தனர். 

ஆசிரியர் வேலுவின் மகள் தா.நதேல்  தனது தந்தையின் எழுத்துப்பணியை பாராட்டி கணை யாழி அணிவித்து சிறப்பித்தார்கள். ஆசிரியர் வேலு பணிகளை பாராட்டி கழகப் பொதுச்செய லாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தொகுத்த அறிவுலக மேதை இங்கர்சால் பகுத்தறிவுக்களஞ்சியம் நூலினை சால் வைக்கு பதில் ஆசிரியர் வேலு வழங்கி சிறப் பித்தார்.

No comments:

Post a Comment