நிதி ஒதுக்கீடு பிரச்சினை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

நிதி ஒதுக்கீடு பிரச்சினை

தமிழ்நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் ஒன்றிய அரசு: இரா.முத்தரசன் சாடல்

திருத்துறைப்பூண்டி,  ஜூன் 6 நிதி ஒதுக்கீடு பிரச்சினை யில்  தமிழ்நாட்டுக்கு எதி ரான ஒரு  நெருக்கடியை கொடுத்து அதிமுகாவை போல் பணியவைக்க ஒன் றிய அரசின் முயற்சி  ஒரு போதும் நிறைவேறாது  என்று இரா.முத்தரசன் தெரிவித்தார்.

திருவாரூர்  மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில  செயலாளர் இரா,முத்தரசன் நேற்று (5.6.2022) அளித்த பேட்டி: 

தமிழ்நாடு  சட்டசபை யில் 21 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளு நருக்கு அனுப்பப்பட்டு  கிடப்பில் கிடக்கிறது. முதலமைச்சர் அதற்கு விரைவில் ஒப்புதல் வழங்க  வேண்டும்  என்று வலியு றுத்திய நிலையில் ஆளு நர் எந்த பதிலும் அளிக்க வில்லை. பாஜகவால் நிய மிக்கப்பட்ட ஆளுநர்  மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்க மறுக்கிறார். இந்த ஆட்சியில் எந்த  நன்மையும் நடந்துவிடக் கூடாது என்பதில் ஒன் றிய அரசு கவனமாக இருக் கிறது. ஒன்றிய அரசு சொல்கிற  சட்டங்களை, திட்டங்களை மாநில அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அப்படி  ஒப் புக்கொள்ளாத மாநிலங் களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று ஒன் றிய அரசு ஒரு  நிலைப் பாட்டை எடுத்துள்ளது நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது. 

பாஜக  மாநிலங்களுக்கு ஒரு நீதி, பாஜக அல்லாத மாநிலங்களுக்கு ஒரு நீதி என்று 8  ஆண்டுகாலமாக அதைத்தான் பின்பற்றி வருகிறது. இயற்கை சீற் றம் உட்பட அனைத்து  நிதி ஒதுக்கீடு பிரச்சி னையில் தமிழ்நாட்டுக்கு எதிரான ஒரு நெருக்க டியை  கொடுத்து தங்களுக்கு கட்டுப்பட்ட அரசாக, அதிமுகவை போல பணி யவைக்க  முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நிறை வேறாது. இவ்வாறு முத் தரசன் கூறினார்.

No comments:

Post a Comment