கடலூரில் மறைந்த 7 பேருக்கு நம் இரங்கலும் - ஆறுதலும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

கடலூரில் மறைந்த 7 பேருக்கு நம் இரங்கலும் - ஆறுதலும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கடலூர் அருகில் உள்ள சில கிராமத்துப் பிள்ளை கள் கெடிலம் நதியில் குளித்து, நீந்தி விளையாடச் சென்று, ஆழத்தில் புதைந்து 7 இளம் பிள்ளைகள் - வளர்ந்து வாழவேண்டிய, அவர்களின் தாய் - தந்தையர்களின் எதிர்கால ஆசைக் கனவுகளைப் பறித்துவிட்டது போன்று - சாவின் மடியில் விழுந்தார்கள் என்ற செய்தி, படிப்போர், கேட்போர் எவரையும் கண்ணீர் கடலுக்குள் தள்ளும் மாளாத் துயரச் செய்தியாகும்!

அக்குடும்பத்தவர்களுக்கு நமது மிகுந்த ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா  5 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதி அளிப்பதாகக் கூறி யுள்ள அறிவிப்பு மிகவும் முக்கியம்.

ஆறு, குளம், ஏரி, கடல் அருகே குளிக்கச் செல்பவர்களுக்குத் தக்க எச்சரிக்கைப் பலகை - போதிய பாதுகாப்பு -  கண்காணிப்பையும் ஏற்பாடு களையும் செய்யவேண்டும்.

அந்த ஏற்பாடுகள் - இனிமேல் இப்படிப்பட்ட துயர அதிர்ச்சி நிகழ்வுகள் ஏற்படாது தடுக்கப் பெரிதும் உதவிடும் என்பது மிகவும் முக்கியமாகும்.

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

6.6.2022


No comments:

Post a Comment