சென்னை, ஜூன் 6- சென்னை யில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நேற்று (5.6.2022) கொண் டாடப்பட்டது. விழாவை மரக்கன்றுகளை நட்டும், மஞ்சப்பைகளை வழங்கி யும் கொண்டாடினர்.
முதலமைச்சர் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உலக சுற்றுச் சூழல் தின வாழ்த்துச் செய்தியில் “மீண்டும் மஞ்சப்பை, பசுமைத் தமிழகம் இயக்கம், முதல்முறையாக தமிழ்நாடு பசுமை சுற்றுச்சூழல் நிறுவனம் என்னும் சிறப்பு நோக்க வாகனம் உள்ளிட்ட பல இயற்கைப் பாதுகாப்பு முன்னெடுப்புகளைத் தமிழ்நாடு அரசு தொடங் கியுள்ளது. உலகச் சுற்றுச் சூழல் நாளில் நமக்கு இருப்பது ஒரே உலகம் என்பதை மனதில் கொண்டு, அனைத்து வகையிலும் அதைக் காக்கப் பாடுபடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கிண்டி
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், கிண்டியில் உள்ள தலைமை அலுவல கத்தில் நடைபெற்ற சுற் றுச்சூழல் தின விழாவில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பங்கேற்று, பசு மைப் பயணமாக பள்ளிக்கு மாணவர்கள் வருவதை ஊக்குவிக்கும் பள்ளிக ளுக்கு பாராட்டுச் சான் றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வாரியத் தலைவர் ஏ.உதயன், உறுப் பினர் செயலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோயம்பேடு
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை சார்பில் கோயம்பேடு மலர் அங் காடி வளாகத்தில் நடை பெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில் ரூ.10 நாண யத்தை செலுத்தினால் மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தின் சேவையை துறை செயலர் சுப்ரியா சாஹூ தொடங்கிவைத் தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் எஸ்.மனிஷ், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, கோயம்பேடு சந்தை தலைமை நிர்வாக அதி காரி எஸ்.சாந்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
எலியட்ஸ் கடற்கரை
சுற்றுச்சூழல் துறை மற்றும் பொலுகேர் இன்ஜினியர்ஸ் இந்தியா சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நடை பெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நடைப் பயணத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கடற்கரைக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பைகள் பயன் படுத்துவதை தவிர்க்கு மாறு விழிப்புணர்வு ஏற் படுத்தினர். இந்நிகழ்ச்சி யில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜே.எம்.எச்.அசன் மவு லானா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை துறைமுகம்
சென்னை துறைமுக நிர்வாகம் சார்பில், அதன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுக ஆணையத் தலைவர் சுனில் பாலிவால் பங் கேற்று மரக்கன்றுகளை நட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் துறைமுக வளாகத்தில் 15 ஆயிரம் மரக்கன்றுகளை நட நிகழ்ச்சியில் முடிவெடுக் கப்பட்டுள்ளது.
வண்டலூர்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூங்கா இயக் குநர் நிவாஸ் ஆர்.ரெட்டி தலைமையில் 350 பூங்கா பணியாளர்களும் தலா ஒரு மரக்கன்றை நடவு செய்தனர்.

No comments:
Post a Comment