'அக்னிபத்' - ராணுவ வீரர்களின் புதிய நியமன நடைமுறையால் விளையக்கூடிய தீமைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

'அக்னிபத்' - ராணுவ வீரர்களின் புதிய நியமன நடைமுறையால் விளையக்கூடிய தீமைகள்

சுசாந்த் சிங்

அரியானா மாநிலம் ரெவாரியில் 15-09-2013 அன்று நடைபெற்ற மேனாள் ராணுவ வீரர்களின் தேர்தல் பிரசாரப் பேரணி ஒன்றில் பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசும்போது, ஒரே தரம் ஒரே ஊதியம் என்ற ராணுவ வீரர்களின் கோரிக்கையை மிகத் தீவிரமாக ஆதரித்துப் பேசினார். பிரதமராக ஆன பிறகு 9 ஆண்டுகள் கழித்து ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஒதுக்கித் தள்ளி விட்டு குறுகிய காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர்களை நியமிக்கும் அக்னிபத்  என்ற புதிய நடைமுறையை மோடி அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டதே பொருளாதார காரணங்களுக் காகத்தான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ அரசு எவ்வளவுதான் முயன்ற போதிலும் முடியாமல் போய் விட்டது.

நிதி சேமிப்பு நோக்கங்கள் 

மோடி பிரதமராக ஆன பிறகு அனைத்து ராணுவ வீரர்களுக்கும் ஒரே தரம் ஒரே ஊதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவது மிகவும் சிக்கல் மிகுந்ததாக ஆகி விட்ட போதிலும் 25 லட்சத்துக்கு மேற்பட்ட ராணுவ ஓய்வூதியக்காரர்களுக்கு அது 2015 அக்டோபர் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக நடைமுறைப் படுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூடுதல் செலவு ஆண்டுக்கு 7 லட்சத்து 12 ஆயிரத்து 338 கோடி ரூபாய் ஆகும். 2014 சூலை முதல் 2015 டிசம்பர் வரையிலான காலத்துக்கான நிலுவைத் தொகை 10392.35 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்த நிதிச் சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது.  இது பாதுகாப்பு அமைச்சகத்தின் மொத்த செலவில் 54% ஆகும். ஓய்வூதியம் வழங்கப் படாததால் கிடைக்கும் சேமிப்பு - கணக்கு புத்தகங்களில் பல பத்தாண் டுகள் கழிந்த பிறகே காட்டப்படும். அது பாதுகாப்புப் படைகள் நவீன மயமாக் கப்படுவதற்கு பயன்படுத்தப்படும். ஏற்கெனவே நீண்ட கால தாமதம் ஆகிவிட்ட தங்களது கோரிக்கையை மேலும் மேலும் தள்ளிப் போடுவ தற்கான கால அவகாசம் ராணுவ வீரர் களிடம் இல்லை. அதற்கான பணம் இப்போதே வந்தாகவேண்டும். நாட்டுக் குத் தேவையான 42 விமானப் படைப் பிரிவுகளில் தற்போது இருப்பது 30 பிரி வுகள்தான். அதே போல தேவைப்படும் 200 போர்க் கப்பல்களுக்கு எதிராக தற்போது உள்ளவை 130 கப்பல்கள்தான். இந்திய காலாட் படையில் ஏற்கெனவே 1 லட்சம் வீரர்கள் குறைவாக உள்ளனர். இந்தியாவுக்குத் தேவையான ராணுவப் படைகளை வைத்து பராமரிக்கும் அளவுக்கு இந்திய பொருளாதார நிலை பலம் பெற்றதாக இல்லை என்பதை இந்த அக்னிபத் திட்டம் மறைமுகமாக சுட்டிக் காட்டுவதாக இருக்கிறது. சீனா, பாகிஸ்தான் என்ற இரு பகை நாடுகளின் அச்சுறுத்தலையும் - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு சவால்களையும் நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த உண்மை நிலைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி புறந்தள்ளி விட முடியாது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக அரசு ராணுவக் கட்டமைப்பை சுருக்கவே முயல்கிறது.

அழிவை ஏற்படுத்தும் பின் விளைவுகள் 

இந்தக் குறுகிய கால நியமன கொள்கை கோட்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்படவும் இல்லை ஒரு சோதனை செயல் திட்டம் மூலம் நடைமுறைப் படுத்திப் பார்க்கும் எந்த ஒரு முயற்சியும் மேற் கொள்ளப்படவும் இல்லை என்பதால் அதன் மிகச் சரியான பின் விளைவுகள் எவை என்பது இத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் போதுதான் தெரியவரும். என்றாலும் ராணுவ வீரர்களின் தொழில் ஆற்றல்கள் மீது அது தீய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயமானது. இளம் ராணுவ வீரர்கள் மிகப்பெரிய அளவில் நியமனத்துக்கு வருவதில் தொடங்கும் அது பயிற்சி ஆற்றல்களை மேம்படுத் துவது அதிக அளவிலான நியமனத்திற்காகவும் விடுவிக்கவும் வீரர்களை நிறுத்தி வைப்பது தேவை யான நிர்வாகக் கட்டமைப்பை பலப்படுத்துவது ஆகிய பணிகளையும் உள்ளடக்கியதாகும். இந்திய விமானப் படை மற்றும் கடற்படை தங்களது விமானி களையும் மாலுமிகளையும் தொழில் நுட்ப ஆற்றல் களையும் ஓர் உயர்ந்த அளவிலான பயிற்சியையும் அனுபவத்தையும் அளிக்கும் தனிச் சிறப்பு பணிகளில் நியமிக்கின்றன. பாதுகாப்புத் துறையின் முதுகெலும் பாக விளங்கும் இந்த நடைமுறை போர்க் கப்பல்களை கடலிலும் போர் விமானங்களை விண்ணிலும் உயர் தொழில் நுட்ப செயல்பாட்டிற்காக வைத்து அவற்றை பாதுகாக்கின்றன. இதன் காரணமே இந்த புதிய அக்னிபத் நியமன நடைமுறையில் குறுகிய காலத் துக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படும் இளம் ராணுவ வீரர்கள் அமைப்பு அளவில் முழுமையாக செயல்படுவதற்கு மேலும் ஒரு சில ஆண்டுகள் ஆகும் என்பதுதான். ராணுவ வீரர்களின் செயல்பாட்டு ஆற்றல் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பது அப்போது தான் தெரிய வரும்.

இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை இந்த சவால் இரு வகையானது. 1748 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு பாரம்பரியப் பெருமையைக் கொண்டது அது. சையத் உசைன் சஹீத் சோஹர்வோர்டி எழுதிய கட்டுரை ஒன்றில் இந்திய ராணுவத்தின் தொடக்க காலத்தில் ஒழுக்கமும் திறமையும் வலியுறுத்தப்பட்டது என்றும் பிளவுபட்டுப் போயிருந்த இந்திய சமூகத்தில் இருந்து ராணுவம் பிரித்துப் பார்க்கப்பட்டது என்றும் எழுதி இருக்கிறார். இது இந்திய ராணுவ வீரர்களை ஒற்றுமையான சுய அதிகாரம் பெற்ற தொழில் நுட்ப வல்லுநர்களாக போரிடுபவர்களாக மாற்றிவிட்டது என்று கூறும் ஸ்டீபன் ரோசன் அவர்கள் - அவர்களது உள்நாட்டுப் படைப் பிரிவுக்கு நீண்ட காலத்துக்கு முழு நேரமும் விசுவாசமாகப் பணியாற்றுவதற்கு மாத ஊதியமும் ஓய்வூதியமும் பெற்று வந்தனர் என்றும் கூறியுள்ளார். வங்காள ராணுவம் கொண்டிருந்த உள் நாட்டு தலைவர்கள் மீதான விசுவாச உணர்வு 1857ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்துக்கான காரணங்களில் ஒன்று. அதன் பிறகு ஆங்கிலேயப் பேரரசர் இந்திய ராணுவத்தில் ஜாதி வர்க்கப் பிரிவுகளை வேறுபடுத்தி தனிமைப் படுத்தி நிர்வாகம் செய்தார் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் கூட ஜாதி வர்க்க வாரியாக ராணுவ வீரர்கள் நியமனம் செய்யப்பட்டது இந்திய ராணுவத்தின் இயல்பையும் பண்பாட்டையும் விளக்கிக் கூறுவதாக அமைந்தது. குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் படையினர் ஜாதி வர்க்கப் பிரிவின்படி நியமனம் செய்யப்படும்போது அவர்கள் மிக நன்றாக பணி ஆற்றினார்கள் என்றும் பல ஜாதி வர்க்கப் பிரிவினரைக் கலந்து நியமிக்கும்போது அவர்களது திறமையான செயல் பாடு மட்டுமே பாதிக்கப்படவில்லை, படைப் பிரிவின் பணி மூப்பு கட்டமைப்பும்கூட பாதிக்கப் படுகிறது என்றும் ஒரு நீதி மன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஜாதி வர்க்க அடிப் படையில் நியமனம் செய்யப்படும் நடைமுறையை பலமாக ஆதரித்த அரசு தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர்களது செயல்பாட்டுத் தேவைகளின் அடிப் படையில் முழுமையான அதிகப்படியான பாதிப்பு கிடைக்கும் வகையில் குழுக்களாகப் பிரித்து வைக்கப் படுவர் என்றும் அரசு கூறியுள்ளது.

ஜாதி வர்க்க வாரியாக ராணுவ வீரர்கள் நியமிக் கப்படும் தற்போதுள்ள நடைமுறை மாற்றப்பட்டு அகில இந்திய அளவில் அனைத்து ஜாதி வர்க்கத் தினரைக் கலந்து நியமிக்கும் நடைமுறை இந்த புதிய அக்னிபத் நடைமுறையில் பின்பற்றப்படும். அரசின் சிந்தனையில் இது போன்ற தீவிர மாற்றம் செய்யப்படுவதற்கான காரணங்கள் ரகசியமானவை. ஆனாலும் அது அமைப்பு மேலாண்மை மய்யத்தின் மீதும் தலைமை கட்டமைப்புகள் மீதும் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தத்துவத்தின் மீதும் தாக்குதல் நடத்தக் கூடியதாகும். இந்திய ராணுவ வீரர்களுக்கு தொழில் ரீதியாக பயிற்சி அளிக்கப்பட்ட போதிலும் கூட அவர்கள் தங்கள் ஊக்கத்தை நாம் (naam) நமக் (namak) மற்றும் நிஷான் (nishan) ஆகிய பண்புகளை எதிரொலிக்கும் தங்களது சமூக அடை யாளத்தில் இருந்து பெறுகின்றனர். அங்கு தனது ஜாதிக் குழு அல்லது தனது கிராமம் அல்லது சமூக அமைப்பில் தனது முன்னோர்களுடன் தனது புகழும் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒவ்வொரு ராணுவ வீரரும் அக்கறை எடுத்துக் கொள் கின்றனர். ஒரு புதிய தொழில் ரீதியிலான அடை யாளத்தைக் கொண்டு அது மாற்றி அமைக்கப்படுவது பாரம்பரியத்தால் கட்டுண்ட ராணுவத்திற்கு அதன் சொந்த சவால்களைக் கொண்டு வருவதாகும். அங்கு 18 ஆம் நூற்றாண்டு போர்க் களங்களில் தாங்கள் செய்த சாகசச் செயல்கள் பற்றிய பிரச்சாரங்களை படைப்பிரிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

அரியானாவில் இருந்து ஒரு ஜாட் வீரரையோ கேரளாவில் இருந்து ஒரு மலையாளியையோ மணிப்பூரில் இருந்து ஒரு மெய்டியைக் கொண்டோ ஒரு கூர்க்கா படைப் பிரிவை நடத்துவதற்கு மிகப் பெரிய அளவிலான கட்டமைப்பு தயாராக இல்லை என்பது போலவே தோன்றுகிறது. மிகத் தயாராக இருக்கும் ஓர் அமைப்பில் தனது செயல்பாட்டில் எப்படியாவது ஒரு வழியை ராணுவம் கண்டு பிடித்துவிடும் என்ற ஒரு நம்பிக்கையைத்தான் அது கொண்டு இருக்கிறது.

இந்த புதிய நடைமுறை விடும் வேறு சவால்களும் இருக்கின்றன. பல்வேறு நிலைகளில் பெற்ற அனுபவமும் ஊக்கமும் கொண்ட ராணுவ வீரர் களுக்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்து ஆங்காங்கே நியமனம் செய்வதில் சில மிகப் பெரிய பிரச்சினைகளும் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ராணுவ வீரர்களில் 25 விழுக்காடு வீரர்களை ராணுவத்தின் நீண்டகாலப் பணிக்காகத் தேர்ந்து எடுப்பது ஆரோக்கியமற்ற ஒரு போட்டியை அவர்களுக்குள் உருவாக்கிவிடும். நம்பிக்கையும் நட்பும் நிலவ வேண்டிய ஓர் அமைப்பில் போட்டி பொறாமையை குறிப்பாக ஒப்பந்த காலத்தின் இறுதி ஆண்டின் போது வெற்றி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர் கள் இடையே நிச்சயமாக உருவாக்கிவிடும். அக்னிபத் கால பணிக்கான தொகுப்பூதியத்தை மறுப்பதற்காகவே நான்கு ஆண்டு ஒப்பந்தத்தை அரசு நிர்ணயித்துள்ள போதிலும் கூட இந்த ஒப்பந்தப் பணிக் காலம் நிரந்தர பணிக் காலத்துடன் சேர்க்கப்படுவதில்லை என்பது போன்ற விதிகளை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்படலாம். ஒரே தரம் ஒரே ஊதியம் பற்றிய கோரிக்கை அரசியல் ரீதியாக எதிர்க் கட்சிகளுக்கு கவர்ச்சி மிகுந்ததாக ஆகிவிடக்கூடும். நாளடைவில் இது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கான நிதி ஒதுக்கீடு உயருவதற்கே வழி வகுக்கும்.

அரசியல் மற்றும் சமூக பாதிப்புகள் 

ராணுவ வீரர்களை நியமிப்பதற்கு தகுதியுள்ள ஆண் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் மாநில வாரியாக நியமனம் செய்வது என்ற 1966 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கருத்தும் இந்த அக்னிபத் திட்டத்தில் கைவிடப்பட்டுவிட்டது. எந்த ஒரு மாநிலத்தாலோ மொழி சமூகத்தாலோ அல்லது இனத்தாலோ ஆதிக்கம் செலுத் தப்படும் சமதன்மையற்ற ஒரு ராணுவம் உருவாவதை அது தடுத்து நிறுத்திவிடும். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இது போன்ற ஆதிக்கம் நிலவியதை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகக் கூறலாம். மிக உயர்ந்த அளவி லான இனசமதன்மை இன்மை யுடன் தொடர்பு கொண்ட ஜனநாயக பிரச்சினைகளையும் உள்நாட்டுப் போர் உருவாவதற் கான வாய்ப்புகளையும் அது அதிகப்படுத்தி விடும். இந்தியாவில் தற்போதுள்ள ஆளும் கட்சியின் கோட்பாடு காரணமாக கூட்டாட்சி தத்துவம் என்பது இன்று மிகவும் தீவிரமான சோதனைகளுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் உள்ளது.

இத்துடன் இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை இன்மையும் சேர்ந்து கொண்டது. 45 கோடி இந்தியர்கள் எந்த ஒரு வேலை வாய்ப்பையும் தேடுவதையே நிறுத்தி விட்டனர். வேலை இல்லாத திண்டாட்டமும் திறமைக்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைத்த வேலையை செய்வதும் நாட்டில் மிகமிக உயர்ந்த நிலையில் நிலவுகிறது. இந்த சூழலில் அமைப்பு ரீதியிலான வன்முறைத் தாக்குதல்களில் பயிற்சி பெற்ற இத்தகைய சில ஆயிரம் இளைஞர்கள் ஆண்டுதோறும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். செயல்பாடுகள் அற்று பிரிந்து தனித்து இருக்கும் ராணுவ வீரர்கள் சிறுபான்மை மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை அதிகரிக்கச் செய்வதற்கு வழி நடத்துகிறார்கள் என்பதற்கு எண்ணற்ற எடுத்துக் காட்டுகளை கூறலாம். ஒரு சிறு தீப்பொறி பட்டாலும் போதும் இந்தியாவை எரித்து விடுவதற்கான குண்டு ஒன்று தயாராக வைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வாழ்க்கை சூழல்கள் அவர்களது குடும்பங்களுக்கான வசதிகள் ஓய்வூதியப் பயன்கள் நிலம் போன்ற பரிசுகளை வழங்குவது ஆகியவை ஆங்கிலேய அரசின் பாரம்பரியத்தில் வந்தவை யாகும். இதன் பொருள் என்னவென்றால் ஒரே குடும்பத்தினர் இந்த பாரம்பரியத்தைப் பின்பற்றி வருபவர்களுக்கு ராணுவ சேவை கவர்ச்சி மிக்கதாக இருக்கிறது என்பதுதான். ஓய்வூதிய சலுகை ராணுவ வீரர்களுக்கு சவுகரியமான ஒரு வாழ்க்கையையும் சமூக தகுதியையும், மரியாதையையும் அளிக்கிறது. ஓய்வூதியப் பயனற்ற குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட வீரர்கள் தங்கள் கவுரவத்திற்கும் தொழில் மரியாதைக்கும் ஏற்றதல்லாத பணிகளையே ராணுவப் பணிக்குப் பிறகு செய்பவர்களாக அவர்கள் பார்க்கப்படுவார்கள். இளைஞர்கள் மீது - அசாதாரணமான கோரிக்கைகள் வைக்கப்படும் மரியாதை மிகுந்த பணியாளர் - என்ற நிலையில் இருந்து அவர்கள் தரம் தாழ்ந்து போகின்றனர். நிதி சேமிப்பை அதிகப்படுத்துவது என்ற அரசின் நோக்கமும் முயற்சிகளும் ராணுவத்தின் கவுரவத்தைக் குறைப்பதாகவும் சமூகத்தின் நிலைத் தன்மையையும் நாட்டின் பாதுகாப்பையும் குறைக்க இயன்ற பேராபத்துகளை உருவாக்கிவிடும். 

  நன்றி : 'தி இந்து' 18-06-2022 

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment