பி.ஜே.பி.யின் அநாகரிக அரசியல் மராட்டிய மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முதலமைச்சர் பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

பி.ஜே.பி.யின் அநாகரிக அரசியல் மராட்டிய மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு முதலமைச்சர் பதவி விலகல்

மும்பை, ஜூன் 30  மகாராட்டிராவில்  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் பதவியை விட்டு விலகுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு சிவசேனா கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து மகா ராட்டிரா ஆளுநர் கோசியாரி இன்று (30.6.2022) சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கு மாறு உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் உத்தரவு சட்டவிரோதமானது என அதனை எதிர்த்து சிவசேனா தலை மைக் கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அவசர மனுவாக விசாரித்தது. அதில் மகாராட் டிராவில் நாளை நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்த தடை இல்லை என தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

மகாராட்டிரா மாநிலத்தில் முதல மைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு சொந்தக் கட்சியான சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் சிண்டே தலைமையில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் உத்தவ் அரசு கவிழும் சூழ்நிலை உரு வாகியுள்ளது. இதனால் மகாராட்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

இதனிடையே, சமூக வலைத்தளம் மூலம் பேசிய அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கூட்டணி கட்சித் தலைவர்கள் சோனியா மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, "என்னை ஆத ரித்த என்சிபி மற்றும் காங்கிரஸ் மக் களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த நேரத்தில் சிவ சேனாவில் இருந்து அனில் பராப், சுபாஷ் தேசாய் மற்றும் ஆதித்யா தாக் கரே ஆகியோர் மட்டுமே என்னுடன் இருந்தனர். எனது ஆட்சிக் காலத்தில் அவுரங் காபாத்தை சம்பாஜி நகர் என்றும், உஸ்மானாபாத்தை தாராசிவ் என்றும் அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றி யதில் நான் திருப்தி அடைகிறேன்" என்று உருக்கமாக பேசினார்.

பதவி விலகல் அறிவிப்பு

தொடர்ந்து பேசியவர், "முதல மைச்சர் பதவியைவிட்டு விலகுகிறேன். மேலவை பதவியை விட்டும் விலகு கிறேன்" என்று அறிவித்தார். உச்சநீதி மன்றத் தீர்ப்பை அடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


No comments:

Post a Comment