முதன்முறையாக விலா எலும்புகள் மூலம் காது குறைபாட்டை சரிசெய்து மருத்துவர்கள் சாதனை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 30, 2022

முதன்முறையாக விலா எலும்புகள் மூலம் காது குறைபாட்டை சரிசெய்து மருத்துவர்கள் சாதனை!

 புதுடில்லி. ஜூன்.30 சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவர்கள் புதுமையான அறுவை சிகிச்சை ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக செய்துள்ளனர்.

 ஆங்கிலத்தில் ”ஏர் டிபார்மிட்டி” அதாவது காது அமைப்பு பிறப்பிலேயே சரியாக இல்லாமல் இருப்பது. உட்புறம் குழிந்தோ அல்லது முன்புறம் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற நிலை ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களின் தோற்றம் அவர்களின் காது அமைப்பினால் சற்று வித்தியாசமாகக் காணப்படும். இந்த ”ஏர் டிபார்மிட்டி” குறை பாட்டை சரி செய்ய சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் புது வழியை கண்டறிந் துள்ளனர்.

அது என்னவெனில் விலா எழும்புகளை எடுத்து அறுவைசிகிச்சையின் மூலம் காது பகுதியில் பொருத்தி காதின் அமைப்பைச் சரிசெய்வது ஆகும். விலா எலும்புகள் துண்டிக்கப்பட்ட இடத்தில் டைட்டானியத்தால் செய்யப்பட்ட பிளேட் பொருத்தப்படுவதால் விழா எலும்புகளிலும் இடைவெளி இல்லாமல் சரிசெய்யப்படுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு 12 வயது சிறுமி ஒருவருக்கு இரண்டு காதுகளும் முன்புறம் தொங்கிக்கொண்டிருக்கும் நிலை யில் இருந்துள்ளது. இதனால் சிறுமியினுடைய முக அமைப்பில் விகாரத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவர்கள் சிறுமியின் விலா எலும்புகளில் சில பகுதியை வெட்டி எடுத்து அறுவைசிகிச்சையின் மூலம் காதில் பொருத்தி காது அமைப்பை சரி செய்துள் ளனர்.

இந்த விலா எலும்புகளை எடுத்து காது அமைப்பை சரிசெய்யும் அறுவைசிகிச்சை முதன்முறையாக சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அறுவை சிகிச்சை குழுவில் மருத்துவர் சஞ்சய் குமார், மருத்துவர் திவ்யா சிறிவஸ்தவா, மருத்துவர் பூபேஷ் கோகியா ஆகியோர் இடம்பெற்றனர்.


No comments:

Post a Comment