கொல்கத்தா, ஜூன் 13- மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத் தில் உள்ள ஒரு கோயில் விழாவில் கடுமையான கூட்ட நெரிசல், வெயில் காரணமாக தம்பதி உள் பட 3 முதியவர்கள் உயி ரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
விழாவில் பங்கேற்ற பல ருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, அருகி லுள்ள பள்ளியில் மருத் துவ முகாம் அமைக்கப் பட்டு, பாதிக் கப்பட்டவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இணை காவல் ஆணையர் துருப ஜியோதி தேய் கூறுகை யில், ‘கூட்ட நெரிசல் மற் றும் கடும் வெயில் கார ணமாக உடல்நலக் குறை வுக்கு ஆளான மூவர், அருகிலுள்ள மருத்துவ மனைக்கு உடனடியாக கொண் டுசெல்லப்பட்ட னர். அவர்களைப் பரி சோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்’ என்றார்.
கோயில் விழாவில் மூவர் உயிரிழந்தது குறித்து மாநில முதலமைச்சர் மம்தா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘இஸ்கான் கோயில் விழாவில் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 3 பேர் உயி ரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவர்களின் குடும்பத்தின ருக்கு எனது ஆழ்ந்த இரங் கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment