பெரம்பலூர், ஜூன் 13- மாணவர் களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அமைந் துள்ள வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்து கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில போக்குவ ரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று (12.6.2022) நடந்த நிகழ்ச் சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கரோனா தொற் றுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழ் நாடு முழுவதும் நாளை (இன்று) பள்ளிகள் தொடங்கப்படவுள்ள நிலையில், மாணவ - மாணவிகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள வழித் தடங்களில் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், பள்ளிப் பேருந் துகளை முழுமையாக ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, கண்காணிப்பு கேமரா பொருத்த பள்ளி நிர்வா கங்களுக்கு அறிவு றுத் தப்பட்டுள்ளது.
பேருந்தில் பள்ளி மாண வர்கள் இலவசமாக பய ணம் செய்வதற்காக வழங் கப்படும் பேருந்து பயண அட்டையை, ஸ்மார்ட் அட்டையாக வழங்க ஒப் பந்தம் விடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டை வழங் கும் வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பேருந்து பயண அட் டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment