புதுடில்லி, ஜூன் 11 வகுப்புக்கு வந்து, பாடம் நடத்தும் கடமை மட்டும் முடிந்தது என்று இல் லாமல், மாணவர்களுக்காக பேராசிரியர்கள் சிலர் சிந்தித்ததன் விளைவாக பழைய பேருந்து ஒன்று பயன் தரும் நூலகமாக மாறியுள் ளது.
மேகாலயா மாநில துரா அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள்தான் இதனை செய்துள்ளனர்.
இந்த பேருந்து மினி நூலகமாக இருப்பதோடு ஏழை, எளிய மாணவர்கள் தங்களுக்கான புத்த கங்கள், ஆடைகள், எழுது பொருட் கள் ஏன் சில நேரங்களில் உணவு களை கூட இங்கிருந்து பெற முடிகிறது.
இது குறித்து அந்தக் கல் லூரியின் துணை பேராசிரியர் ஜெனா ஜெ மோமின் கூறு கையில், “இந்த பழைய பேருந்தை பயனுள்ள வாகன மாக மாற்றும் எண்ணம் மட்டும்தான் எங்களுடையது. அதில் மாணவர்களின் பங்களிப்பே அதிகம். அவர்கள் இந்த நூலகத்தில் வைக்க வேண்டிய புத்தகங்கள், மாணவர்களுக்குத் தேவை யான உபகரணங்கள் எனப் பார்த்து பார்த்து கொண்டு வந்து சேர்த் துள்ளனர்.
நோட்பேட் தொடங்கி மழை யில் தடையில்லாமல் கல்லூரி வர குடை வரை
வைத்துள்ளனர்” என்றார்.
மேகாலயாவின் துரா நகரில் கல்வி நிலையங்கள் ஏராளமாக உள்ளன. அதனால் மற்ற பகுதி களில் உள்ள மக்கள் தங்கள் பிள் ளைகளை துரா நகருக்கு அனுப்பு கின்றனர்.
சிலர் அண்டை கிரா மங்களில் இருந்து கடும் சிரமங்களுக்கு மத்தி யில் வருகின்றனர்.
இந்த சிரமத்தை கருத்தில் கொண்டே பழைய பேருந்து இப்படியொரு யுடிலிட்டி வாகன மாக மாற்றப் பட் டுள்ளது.
பேருந்தில் இருக்கும் ட்ராப் ஏரியாவில் வசதி படைத்தவர்கள் தங்களால் இயன்ற புத்தகம், எழுது பொருள்கள், ஆடைகள், உணவு என எதை வேண்டு மானாலும் வைத்துச் செல்ல லாம்.
இந்தப் பேருந்தை முழு மையாக மாற்ற ஏற்பட்ட செலவை கல் லூரியின் ஆங் கிலத் துறை பேரா சிரியர்கள் 7 பேர் பகிர்ந்து கொண் டுள்ளனர். இதற்காக அவர்கள் அனைவரும் தங்களின் இரண்டு மாத ஊதியத்தை கொடுத்துள் ளனர்.
இது குறித்து கல்லூரி மாணவி டான்சி கடேசில் மராக் கூறுகை யில், “இந்த ப்ராஜக்ட் மூலம் பயனற்ற பொருளைக் கூட பயனுள் ளதாக மாற்றலாம்” என்று கூறினார்.
கரோனா காலத்திற்கு பின்னர் மாணவர் - ஆசிரியர் உறவு மேம் பட்டுள்ளது என்று ஆசிரியர்கள் கூறுகின் றனர்.

No comments:
Post a Comment