பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை: சமூக சேவகர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 12, 2022

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை: சமூக சேவகர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 11 பெண்களின் முன்னேற்றத் திற்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-2023ஆம் நிதியாண்டிற்கான சுதந்திர தின விழாவின்போது, சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்: தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 

18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்து தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.வருகின்ற 30ஆம் தேதிக்குள் கருத்துக்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது: தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜூன் 11 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.  அந்தவரிசையில் 2022ஆம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வழங்கப்படுகிறது. பெரியார் ஒளி விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கும், காமராசர் கதிர் விருது விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம், அயோத்திதாசர் ஆதவன் விருது மேனாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி செல்லப்பனுக்கும், காயிதே மில்லத் பிறை விருது எஸ்.டி.பி.அய் தலைவர் தெகலான் பாகவிக்கும், செம்மொழி ஞாயிறு தொல்லியல் அறிஞர் பேரா.கா.ராசன், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் ஜவஹருக்கும் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment