கொடைக்கானல், ஜூன் 11- சூரியனை ஆய்வு செய்யும் புதிய விண்கலமான ஆதித்யா விண்கலம் தொடர்பாக கொடைக்கானலில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய விண் வெளி ஆய்வு மய்யத்தின் அறிவியலாளர் ரமேஷ் கூறியதாவது: சூரியனை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த உள்ளது. விஞ்ஞானிகள் ராகவேந்திர பிரசாத், ஜக்தேவ் சிங் தலைமையில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. செப்டம்பரில் இந்த விண்கலம் முழுமை பெற்று இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்படும்.
இஸ்ரோ மேலும் ஆய்வு செய்து 2023 ஜூனில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சூரியனை தரையிலிருந்து ஆய்வு செய்தால் உதிக்கும் நேரத்தில் மட்டுமே ஆய்வு செய்ய முடியும். விண்ணில் விண்கலம் மூலம் ஆய்வு செய்தாலும் பல்வேறு இடர்பாடுகள் இருக்கும். இதையெல்லாம் தாண்டி எல்.அய்., எனப்படும் லெக் ராஜியன் பாயின்ட் என்ற பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்படும். இங்கிருந்து சூரியனை ஆய்வு செய்ய எந்த இடையூறும் இருக் காது. இந்த விண்கலத்தில் வி.எல்.சி., என்ற நவீன கருவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொருத்தப்பட உள்ளன. சூரியனுக்கும் பூமிக்கும் 150 மில்லியன் கி.மீ., தூரம் உள்ளது.
சூரியனிலிருந்து உதிக்கும் சூரிய கதிர் பூமியை வந்தடைய 7 நிமிடங்கள் ஆகும். எல்.அய்., எனப்படும் லெக் ராஜியன் பகுதி பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ., தூரத்தில் உள்ளது. உலகில் எந்த நாடும் சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை இப்பகுதியில் நிலை நிறுத்த வில்லை. சூரியனை இப்பகுதியிலி ருந்து 24 நேரமும் கண்காணிக்க முடியும்.
பூமியில் ஏற்படும் பூகம்பம், சூரியனில் இருந்து வெளி யாகும் காந்த புயல் பூமியை நோக்கி வரலாம். இதனால் விண் ணில் சுற்றும் விண்கலங்கள் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பழுது அடையலாம். இவற்றையெல்லாம் முன் கூடியே தடுக் கலாம் என்று கூறினார். விஞ்ஞானிகள் ராகவேந்திர பிரசாத், ஜக்தேவ் சிங், கொடைக்கானல் விண்வெளி ஆராய்ச்சி மய்ய விஞ்ஞானிகள் எபினேசர், குமரவேல் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment