பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அவசர ஊர்தி மறுப்பு: மகளின் உடலை தோளில் சுமந்த தந்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அவசர ஊர்தி மறுப்பு: மகளின் உடலை தோளில் சுமந்த தந்தை

போபால், ஜூன் 13 மத்தியபிர தேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டம், பவுடி கிராமத்தை சேர்ந்தவர் லக்ஷ்மன் அகிர்வார். இவரது 4 வயது மகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள பக்ஸ்வாகா சுகாதார மய்யத்துக்கு குடும்பத் தினர் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதை யடுத்து அவரை அருகில் உள்ள தாமோஹ் மாவட்ட மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அதே நாளில் சிறுமி உயிரிழந் தார்.

இதையடுத்து சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அவரது தாத்தா மன்சுக் அகிர்வார், மருத் துவமனை ஊழியர்களிடம் அமரர் ஊர்தி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் மறுத்து விட்டதாகவும் சிறுமியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதையடுத்து அவர்கள், சிறுமியின் உடலை போர் வையில் சுற்றி பேருந்து மூலம் பக்ஸ்வாகா எடுத்துவந்தனர். பிறகு அங்கிருந்து கிராமத்துக்கு செல்ல தனி வாகனத்துக்கு பண வசதி இல்லாததால் பக்ஸ்வாகா நகர பஞ்சாயத்தை சிறுமியின் தந்தை லக்ஷ்மன் அணுகியுள்ளார்.

ஆனால் அவர்களும் வாகன ஏற்பாடு செய்ய மறுத்துவிட்ட தால், லக்ஷ்மன் வேறு வழியின்றி தனது மகளின் உடலை தானே தனது தோளில் சுமந்து சென் றுள்ளார்.

ஆனால் சிறுமி குடும்பத்தினரின் குற்றச்சாட்டை தாமோஹ் மாவட்ட மருத் துவமனை அதிகாரி மம்தா திமோரி மறுத்துள்ளார். 

“எங்க ளிடம் அமரர் ஊர்தி உள்ளது. செஞ்சிலுவை சங்கம் அல்லது பிறதொண்டு நிறுவனங்கள் மூலம் எங்களால் அமரர் ஊர்தி வசதி செய்துதர முடியும். 

ஆனால் அமரர் ஊர்தி கேட்டு என்னை யாரும் அணுக வில்லை” என்றார்.

மற்றொரு    நிகழ்வு

ம.பி.யில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டும் மற்றொரு நிகழ்வு சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. இங்கு பகவான்தாஸ் என்பவர் தனது சகோதரனின் சடலத்தை கதகோட்டா சுகாதார மய்யத்திலிருந்து கை வண்டியில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதிகாரிகள் அமரர் ஊர்தி தர மறுத்துவிட்டதால் உடலை கை வண்டியில் எடுத்துவந்ததாக பகவான்தாஸ் கூறினார்.

இதுகுறித்து வட்டார மருத் துவ அதிகாரி சூயஷ் சிங்காய் கூறும்போது, “நோயாளி இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் பணியில் இருந்த மருத்துவர் உடற்கூறாய்வுக்கு அறிவுறுத் தியதால் அவர்களே உடலை எடுத்துச் சென்றுவிட்டனர்” என்றார்.

ம.பி.யின் கர்கான் மாவட்டம், பகவன்புராவில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரி ழந்தார். அரசு அவசர ஊர்தி வசதிக்கு பலமுறை முயன்ற போதும் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். 

இதுகுறித்து விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment