பெங்களூரு, ஜூன் 13 கருநாடகா மாநிலம் சிக்கமகளூரு சிறை ‘போக்சோ’ வழக்கில் கைதானவர்களால் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. சிக்கமகளூரு, குழந்தைகள், சிறுமிகள், இளம் பெண்களை பலாத்காரம் செய்பவர்கள், அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்கள் மீது 'போக்சோ' (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். இந்த நிலையில் கருநாடகத்தின் மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூருவில் குழந்தைகள், இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், ஏராளமானோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் போக்சோ வழக்கில் கைது செய்யப்படுபவர்களால் சிக்கமகளூரு சிறை நிரம்பி வழிகிறது. இவர்களில் பெரும் பாலானோர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment