பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல - ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல - ப.சிதம்பரம்

சென்னை, ஜூன் 27- சென்னை யில் காங்கிரஸ் பொருளா தார மாடல் எனும் கருத் தரங்கில் பேசிய மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம் பரம் “பக்கோடா விற்ப தையும், பஜ்ஜி போடுவ தையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட் டோம்” என்று ஒன் றிய பாஜக அரசை கடுமை யாக சாடியுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம் “31 வருடங் களாக இந்தியா உலக ளாவிய பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. 1991லிருந்து இந்திய பொருளாதாரம் தொடர்ச்சியாக வளர்ந் துள்ளது. அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பொருளதார மாற்றங்கள் பற்றி பேசப் போகிறேன். 2004 லிருந்து 4 முறை மொத்த உள்நாட்டு உற் பத்தி மாற்றமடைந்துள் ளது. 7.5 % லிருந்து 9% என மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது.

230 மில்லியன் மக்கள் முன்னேற்றம் அடைந் தனர். நமது மக்கள் தொகையில் 50 % க்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்கும் கீழ் உள்ள இளைஞர்கள். பொருளா தார கொள்கையை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த 31 வருடம் பொருளாதாரம் பற்றி பல அனுபவங்களைக் கொடுத்துள்ளது. பிராந் தியங்களுக்கு இடையே வேறுபட்ட பொருளாதா ரம் நிலவு கிறது.எங்களு டைய முக்கிய இலக்கு அதிக வேலை வாய்ப்பு களை உருவாக்குவது.

காங்கிரஸ் கட்சி ஆட் சிக்கு வந்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வோம். பக்கோடா விற்ப தையும், பஜ்ஜி போடுவ தையும் வேலைவாய்ப்பு என சொல்ல மாட்டோம். பசியால் வாடுபவர்களின் நாடுகளின் பட்டியலில் இந்தியா 140 நாடுகளில் 101ஆவது இடத்தில் உள் ளது. 8.72 லட்சம் இடங் கள் ஒன்றிய அரசு பணி கள் காலியாக உள்ளது. ஆனால் 10 லட்சம் பணி இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளதாக கூறுகின் றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை உள்ளது. காங்கிர ஸால் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க முடியும். எங்களுடைய முக் கிய இலக்கு இது தான்.” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment