மோடி வருகையும் ரூ.23 கோடி செலவும் ஒரு நாள் மழைக்கு தாங்காத கர்நாடக சாலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

மோடி வருகையும் ரூ.23 கோடி செலவும் ஒரு நாள் மழைக்கு தாங்காத கர்நாடக சாலை

பெங்களூரு. ஜூன் 27- பெங்களூரு பல்கலைக் கழக வளாகத்தில் பிரத மர் மோடி  வருகைக்காக ரூ.23 கோடி செலவில் புதிதாக அமைக்கப் பட்ட சாலை இரவு நேரத்தில் பெய்த கன மழையை தாங்க முடி யாமல் குண்டும் குழியு மாக மாறியது.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்காக பெங்களூரு வில் ரூ. 23.5 கோடி செலவில் 14 கிமீ சாலைகள் புதிதாக அமைக் கப்பட்டன. கெங்கேரி முதல் கொம்மாகட்டா சாலை  (7 கிமீ), மைசூர் சாலை (0.15 கிமீ), ஹெப்பால் மேம்பாலம் (2.4 கிமீ), தும்கூர் சாலை (0.90 கிமீ) மற்றும் பெங் களூரு பல்க லைக்கழக வளாக சாலை (3.6 கிமீ) ஆகிய சாலைகளை அதி காரிகள் மேம்படுத்தினர். மைதானங்கள், நிலை யான தெரு  விளக்குகள், வர்ணம் பூசப்பட்ட சாலைகள் போன்ற பணி களும் மேற்கொள்ளப்பட் டன. பிரதமர் வருகைக்கு சில நாட்கள் முன்பு அமைக்கப்பட்ட இந்தச் சாலைகளில் ஜூன் 20-ஆம் தேதி பயணம் செய் தார் பிரதமர் மோடி. இந்நிலையில் அன்று இரவு பெய்த கனமழை யால் பெங்களூரு பல் கலைக்கழக வளாகத்தில் உள்ள மாரி யப்பன் பாளைய ஞானபாரதி பிர தான சாலையின் ஒரு பகு தியில் பள்ளம் ஏற்பட்டது.

ஜூன் 23-ஆம் தேதி கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மோசமான பணிகள் குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரண மானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெங்க ளூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரி நாத்துக்கு உத்தர விட்டு உள்ளார். பெங்களூரு மாநகராட்சி ஆணையர் துஷார் கிரிநாத், சில இடங்களில் சாலை சேத மடைந்துள்ளது என்று ஒப்புக்  கொண்டார். ஆனால் அது கனமழை யால் மட்டுமே நடந்தது என்றும் சாலையின் முழு நீளமும் சேதமடைந்த தாகக் கூறு வது நியாய மில்லை என்றும் கூறி னார். மேலும் சாலைப் பணிகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற் றதாக சிறப்பு ஆணையர் ராம்பிரசாத் மனோகர் தெரி வித்துள்ளார். சில இடங்களில் ஏற்பட்ட சேதம் எங்கள் கவ னத்துக்கு வந்துள்ளது. மழை பெய்து, முறையான க்யூரிங்  இல்லாததால், ஒட்டுவேலை உரிந்து இருக்கலாம். மீண்டும் சரி செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கூறுவோம்,’’ என்றார் மனோகர்.

No comments:

Post a Comment