டெகராடூன், ஜூன் 27- ஓடும் காரில் பெண் மற்றும் அவரின் 6 வயது மகளும் கூட்டு பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவார் மாவட்டம் பிரையன் கலியர் பகுதியை சேர்ந்த பெண் தனது 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். ரூர்கீ என்ற பகுதியில் உள்ள சாலை யில் நடந்து சென்றுகொண்டிருந்த போது சோனு என்ற நபர் தனது காரில் அழைத்துச் செல்வதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண் தனது மகளுடன் அந்த காரில் ஏறியுள்ளார். காரில் ஏற்கெனவே சோனுவின் நண்பர்கள் இருந்து உள்ளனர். அப்போது, ஓடும் காரில் அந்த பெண்ணையும் அவரின் 6 வயது மகளையும் காரில் இருந்த வர்கள் கூட்டு பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். பின் னர் ஓடும் காரில் இருந்து அந்த பெண்ணையும், அவரது மகளை யும் ஆற்றங்கரை அருகே தள்ளி விட்டுள்ளனர். இதையடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள் ளான பாதிக்கப்பட்ட அந்த பெண் நடந்த நிகழ்வு குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை தொடர்ந்து வழக் குப்பதிவு செய்து பெண்ணையும் அவரின் 6 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணும், அவ ரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
வட இந்தியாவில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் கூட்டுப் பாலியல் வன் கொடு மைகள் மிகவும் சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பதால் நாளிதழ் களில் பரபரப்பான செய்தி வருவ தோடு சரி - குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை, அப்படியே கைதாகினாலும் கைதான சில மணி நேரங்களில் வெளியில் வந்து விடுகின்ற்னார்.
இதனால் பாலியல் குற்றவாளி கள் தொடர்ந்து குற்றங்கள் செய் யும் துணிச்சலைப் பெற்றுவிடுகின் றனர்.
No comments:
Post a Comment