காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

காங்கிரஸ் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் - ராகுல்காந்தி கண்டனம்

புதுடில்லி, ஜூன் 27- திரிபுரா இடைத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் 4 சட்டசபை தொகு திகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தலைநகர் அகர் தலாவில் காங்கிரஸ் வெற்றி பெற் றுள்ளது. இதற்கிடையே, அகர் தலாவில் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜக  மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. கற்களும் வீசப்பட்டன. இதில், மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்கா உள்பட 19 பேர் காயமடைந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக் கிறேன். மக்கள் எங்களுடன் உள் ளனர். இந்த தாக்குதலை தடுக்கா மல் காவல்துறை வேடிக்கை பார்த் தது வெட்கக்கேடு. அந்த குண்டர் களை நீதியின் முன்பு நிறுத்த வேண் டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment