புதுச்சேரி, ஜூன்27- பன்முகத் தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்தும் புதுச்சேரி அரசின் முடிவை கைவிட வேண்டும் என்று முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பிரதேச மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11 ஆவது மாநாடு முல்லை நகரில் நேற்று (26.6.2022) நடைபெற்றது.
புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் புகுத்தும் நோக்கில் சிபிஎஸ்இ கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை அரசு கைவிடவேண்டும், மாணவர்களின் மேல்படிப்பை கேள்விக்குறியாக்கும் கியூட் நுழைவுத் தேர்வை புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வருவதை கைவிட வேண்டும், புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் கலைமாமணி விருதுகளை உடனே வழங்க வேண்டும், கலை இலக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளுக்கு கம்பன் கலை அரங்கத்தை குறைந்த வாடகையில் வழங்க வேண்டும், நூல் வெளியீட்டிற்கான மானியத்தொகையை தொடர்ந்து அளிப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும், அரசு விழாக்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் புதுச்சேரியை சார்ந்த கலைஞர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment