ரூ.6 லட்சம் கோடி வங்கிக்கடன் மோசடி- பா.ஜ.க.வுக்கு ரூ.27 கோடி நன்கொடை மோடி அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 27, 2022

ரூ.6 லட்சம் கோடி வங்கிக்கடன் மோசடி- பா.ஜ.க.வுக்கு ரூ.27 கோடி நன்கொடை மோடி அரசுமீது காங்கிரசு குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 27- டி.எச்.எஃப்.எல்.  நிறு வனத்தில் ரூ.34,615 கோடி வங்கிக்கடன் மோசடி  நடைபெற்றுள்ளது எனவும், பிரதமர் மோடிக்கு தெரிந்தே மோசடி நடந்ததாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. மேலும் பிரதமர் மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் மோசடி நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. 

காங்கிரஸ்     மூத்த     தலைவர் மல்லிகார் ஜுன  கார்கே   டிவிட்டர் பதிவில் குறிப்பிட் டுள்ளதாவது,

ஒன்றியத்தில் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி  அமைத்த  பிறகு  நடைபெற்ற வங்கி  மோசடிகள்  குறித்த  பட்டியலை பகிர்ந் துள்ளார். விஜய்  மல்லையாவின்  9  ஆயிரம் கோடி ரூபாய் மோசடி, நீரவ்  மோடியின்  14  ஆயிரம்  கோடி ரூபாய் வங்கி மோசடி, ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின்  23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி, தற்போது  டி.எச்.எஃப்.எல்.   நிறுவனத்தின் 35 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்திற்கு  வந்திருப்பதாக மல்லிகார் ஜுன கார்கே  குறிப்பிட்டுள்ளார். 

மோடி  ஆட்சிக்கு  வந்த பிறகு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடன் மோசடி நடைபெற்றிருப்பதாக  அவர்  குற்றஞ்சாட்டி யுள்ளார். டி.எச்.எஃப்.எல்.    நிறுவனம் பா.ஜ.க. வுக்கு 27 கோடி  ரூபாய்  நன்கொடை  கொடுத் திருப்பதை         சுட்டிக்காட்டியுள்ள மல்லி கார்ஜுன  கார்கே,  இந்த  பணம் அனைத்தும்  மக்களிடம்  கொள்ளையடிக்கப்பட்டவை  என்று  கூறியுள்ளார். 

BJP  என்பது  Bank frauds & Jumla Party ஆக மாறிவிட்டதாகவும் மல்லிகார் ஜுன   கார்கே   விமர்சித்துள்ளார். 

இதனிடையே,       இந்தியாவின் மிகப் பெரிய    வங்கி    மோசடியான டி.எச்.எஃப்.எல்.  நிறுவனத்தின்  34 ஆயிரத்து  615  கோடி  ரூபாய்  வங்கிக் கடன்  மோசடி,  பிரதமர்  மோடிக்கு தெரிந்தே  நடந்திருப்பதாக  காங் கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக   அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா வெளியிட்டுள்ள   அறிக்கையில், டிஎச்.எஃப்.எல்.   நிறுவனத்தின்  மோசடிகள்  2019 ஆம்  ஆண்டே  தணிக்கைத்  துறை அறிக்கையில் தெரிய வந்த போதிலும் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசு அந்நிறு வனம்மீது  எந்த  நடவடிக்கையும்  எடுக்க வில்லை  என்றும்,  மாறாக டி.எச்.எஃப்.எல்.  மற்றும்  அதன் துணை நிறுவனங்களிடமிருந்து ஆளும்  பா.ஜ.க.  27  கோடி  ரூபாய்க்கு மேல்  நன்கொடைகளை  பெற்றிருப்பதாகவும் கண் டனம் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment