அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம்

சென்னை, ஜூன் 1 கடந்த 1998 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அரசுப் போக்குவரத்துக்

கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலையில் கடந்த 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவு பாரபட்சமானது. 

எனவே அதை ரத்து செய்து கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும், என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.சரவணன் முன் பாக நடந்தது. அப்போது நீதிபதி, 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2016 முதல் 2017 வரையிலான கால கட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்குவது என்பது பாரபட்சமானது.

எனவே கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் 7ஆவது ஊதிய ஒப்பந்தக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம், நிலுவைத்தொகை, அக விலைப்படி உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என உத்தர விட்டுள்ளார்.


No comments:

Post a Comment