ஜூலை 3: பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 29, 2022

ஜூலை 3: பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா

தமிழர் தலைவர் கி.வீரமணி, ஈ.வெ.கி.ச.இளங்கோவன், அமைச்சர் பெருமக்கள் பங்கேற்பு

பொத்தனூர், ஜூன் 29- பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா 3.7.2022 அன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன், தமிழ்நாடு அரசின் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வாழ்த் துரை வழங்கவுள்ளனர்.

பொத்தனூர் ஆர்.கே. திருமண மண்டபத்தில் 3.7.2022 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பெரியார் பெருந்தொண் டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்க ளின் நூற்றாண்டு விழாவின் முதல் அமர்வாக வாழ்த்தரங்கம் நடைபெறு கிறது.

வாழ்த்தரங்கம்

சேலம் மண்டல கழகத் தலைவர் கவிஞர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் வாழ்த்தரங்கத்தில், நாமக் கல் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ வரவேற்புரையாற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சின்ராஜ், ராஜேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், பொன்னுசாமி, சேகர், நாமக்கல் (மேற்கு) மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, இந்திய கண சங்கத் தலைவர் பேராசிரியர் மு.பெ.முத்துசாமி, திருவாரூர் ஒன்றிய தி.மு.க. மேனாள் செயலாளர் ஆர்.பி. சுப்பிரமணியம், கடவூர் மணிமாறன், டாக்டர் ஆர்.சோமசுந்தரம், டாக்டர் செந்தில், மு.நல்லேந்திரன், வேர்ப்பலா அழகரசன், டாக்டர் எஸ்.பழனியாண்டி, டாக்டர் கே.பி.கே. நெடுஞ்செழியன், ஆத்தூர் ‘விடுதலை' சந்திரன், பொத் தனூர் தி.மு.க. பேரூராட்சித் தலைவர் ஆர்.கருணாநிதி, எஸ்.பி.எம்.சண்முகம் (திமுக), இளங்கோவன் (மதிமுக), செல்வி மணி (காங்கிரஸ்), கரூர் மாவட்ட கழகத் தலைவர் ப.குமாரசாமி, சேலம் மாவட்ட கழகத் தலைவர் ஜவகர், பொன்னம்பலம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ப.க. மாவட்டத் துணைத் தலைவர் வீரமுருகன், வேலூர் ப.க. நகரச் செயலாளர் இராசசேகரன் ஆகியோர் இவ்விழாவிற்கு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.

மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வு

பிற்பகல் 3 மணியளவில் ஈட்டி கணேசனின் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வான மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெறவுள்ளது.

பெரியார் படிப்பகம் திறப்பு விழா!

மாலை 4 மணியளவில் பொத்தனூர் அரசு மேனிலைப் பள்ளி அருகில் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவு - தந்தை பெரியார் படிப்பகம் கட்டடத் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத் தலைவர் அ.கு.குமார் தலைமையில் நடைபெறும். இவ்விழாவில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தந்தை பெரியார் படிப்பகம் கட்ட டத்தை திறந்து வைக்கிறார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தை திறந்து வைக்கிறார்.

நூற்றாண்டு விழா இரண்டாம் அமர்வு

பொத்தனூர் க.சண்முகம் அவர் களின் நூற்றாண்டு விழா இரண்டாம் அமர்வு மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றுகிறார். பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி தலை வர் பேராசிரியர், முனைவர் ப.காளி முத்து வரவேற்புரையாற்ற, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூற் றாண்டு மலரை வெளியிட்டுச் சிறப்பு ரையாற்றுகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் நூற்றாண்டு விழா மலரைப் பெற்றுக் கொண்டு உரையாற்றுகிறார்.

வாழ்த்துரை

தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக் கரசு, பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், துணைப் பொதுச் செயலாளர் இ.ச.இன்பக்கனி, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் பழனிபுள்ளை யண்ணன், மாநில கிராமப்புறப் பிரச் சாரச் செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கோவை பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன், பொத்த னூர் ம.சிவக்குமாரன், பெரியார் பெருந் தொண்டர் மயிலை கிருஷ்ணன், சேலம் மாவட்டக் கழக செயலாளர் அ.இள வழகன், திருச்சி மண்டலத் தலைவர் நற்குணம், திருச்சி மாவட்டத் தலைவர் கு.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலா ளர் ப.ஆல்பர்ட், கரூர் மாவட்ட கழக செயலாளர் ம.காளிமுத்து, திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், மாவட் டத் துணைச் செயலாளர் அருண்காந்தி, பொத்தனூர் பெரியார் படிப்பக நூலகர் அறிவாயுதம், பொத்தனூர் த.செல்வ ராஜ் (திமுக) ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

நிறைவாக நூற்றாண்டு விழா காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்தின் தலைவர் விழா நாயகர் பொத்தனூர் க.சண்முகம் அவர் கள் ஏற்புரையாற்றுகிறார். திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் நன்றி கூறுகிறார்.

No comments:

Post a Comment