சென்னை, ஜூன் 21- தமிழக காவல் துறையில் 444 காவல் உதவி ஆய்வாளர் கள் (எஸ்.அய்.) பணியி டங்களை நிரப்புவதற் கான எழுத்துத் தேர்வு வரும் 25,26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண் ணப்பித்த வர்களுக்கான நுழைவுச் சீட்டு தமிழ் மற் றும் ஆங்கிலத்தில் தமிழ் நாடு சீருடைப் பணியா ளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், நேர்காணல் தேர்வு அடுத் தடுத்து நடத்தப்படும். இந்த அனைத்து தேர்வி லும் தேர்ச்சி பெறுபவர் கள் காவல் உதவி ஆய்வா ளர்கள் பணிக்கு தேர்ந் தெடுக்கப்படுவார்கள். முதலில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் பணி ஒதுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment