சென்னை, ஜூன் 21- இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந் தாய்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று (ஜூன் 20) முதல் தொடங்கியது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரு கின்றன. இவற்றில் இள நிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங் கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற் றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர கம் மூலம் ஆக.16 முதல் அக்.14-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று (20.6.2022) தொடங்கியது. மாணவர் கள் லீttஜீs://ஷ்ஷ்ஷ்.tஸீமீணீஷீஸீறீவீஸீமீ.ஷீக்ஷீரீ/ என்ற இணைய தளம் வழியாக ஜூலை 19-ஆம் தேதிவரை விண் ணப்பிக்கலாம். தகுதி பெற்ற மாணவர்களின் சமவாய்ப்பு எண் ஜூலை 22-இல் வெளியாகும்.
இதையடுத்து, தரவரி சைப் பட்டியல் ஆக.8-ஆம் தேதி வெளியிடப் படும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மாணவர்கள் புகார் தெரி விக்கலாம். இந்த புகார் கள் ஆக.9 முதல் 14-ஆம் தேதிவரை சேவை மய்யம் மூலம் நிவர்த்தி செய்யப் படும். அதன்பின் கலந் தாய்வு ஆகஸ்ட் 16ஆ-ம் தேதி தொடங்கி நடைபெறும்.
No comments:
Post a Comment