சேந்தநாடு பெரியார் கொள்கையில் சேர்ந்த நாடானது
விழுப்புரம், ஜூன் 27 விழுப்புரம் மாவட்டம் சேந்த நாட்டில் தந்தை பெரியார் நூற்று நாற்பத்து மூன்றாவது பிறந்தநாள் திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சேந்தநாட்டில் தந்தை பெரியார் 143 ஆவது பிறந்த நாள், திராவிடர் கழகக் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம், கழகக் கொடி ஏற்று விழா, பெரியார் சிந்தனை பலகை திறப்பு விழா என விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே உளுந்தூர் பேட்டை ஒன்றியத் தலைவர் செல்வ.சக்திவேல் தலைமை யில், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் முன்னிலையில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அப் போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பத்தில் விண்ணதிரும் ஒலி முழக்கத்துக்கிடையே கழகத்தின் இலட்சியக் கொடியினை தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார்.
இதனையடுத்து இளைஞர்கள் புடைசூழ உளுந்தூர் பேட்டையிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஊர்தி புறப்பட்டது.
தி.களத்தூரில் கொடியேற்று விழா,
கல்வெட்டு திறப்பு
உளுந்தூர்பேட்டையில் இருந்து சேந்தநாடு செல்லும் வழியில் இடையில் உள்ள தி.களத்தூரில் அமைக்கப் பட்டிருந்த கழகக் கொடிக்கம்பத்தில் கழகத்தின் லட்சியக் கொடியினை ஏற்றி, கல்வெட்டைத் திறந்து வைத்தார். அப்போது கழகத் தொண்டர்களும், ஊர்ப் பொதுமக்களும், இளைஞர்களும் உற்சாக முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வுக்கு விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் பகவான்தாஸ் தலைமை வகித்தார்.
சேந்தநாட்டில் சிந்தனைப் பலகை திறப்பு வழிநெடுகிலும் மக்கள் ஆரவாரத்துடன்
சேந்தநாட்டுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு இளைஞரணி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேந்த நாடு கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் கழகத்தின் லட்சியக் கொடியினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்றி வைத்து, கல்வெட்டு மற்றும் பெரியார் சிந்தனைப் பலகையையும் திறந்து வைத்தார்.
தீப்பந்த வரவேற்பு
பொதுக்கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் தீப்பந்தம் ஏந்தி உற்சாக முழக்கமிட்டு வரவேற்பளித்தனர். அப்போது, ஊர் பொதுமக்களும், அனைத்துக் கட்சித் தோழர்களும் தங்கள் இனத்துக்கான முதுபெரும் தலைவரை வரவேற்ற காட்சி கண்முன் நிழலாடுகிறது. இப்படி மக்கள் வெள்ளத்தைக் கடந்து பொதுக் கூட்ட மேடையை அடைந்தார் தமிழர் தலைவர் அவர்கள்.
கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணிதரன் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்புராயன் தலைமை வகித்தார். விழுப்புரம் மண்டல தலைவர் கோ.சா. பாஸ்கர், விழுப்புரம் மண்டல செயலாளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் பகவான் தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திராவிடர் கழகத்தின் சிறப்புகளையும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதியால் அனுபவித்த கொடுமைகள், குற்றப்பரம்பரை வரலாறு, அதைப் போக்க நீதிக்கட்சி செய்த பணிகளையும் எடுத்துக்காட்டி தொடக்க உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு திராவிட இயக்கத்தின் பலனால் தமிழ்நாடும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் அடைந்துள்ள பயன்களையும், சுயமரியாதைக் கருத்துகளின் வீச்சையும், திராவிட மாடலின் உண்மைத் தன்மையையும், சிறப்பையும் எடுத்துச் சொல்லி, கிராமத்தவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்புரையாற்றினார்.
வாழ்க்கை இணையேற்பு விழா
முன்னதாக கிழக்கு மருதூரைச் சேர்ந்த ஜெயபாலன் - அஞ்சலிதேவி ஆகியோரின் மகன் ஜெ.வீரப்பன் அவர்களுக்கும், கடலூரைச் சேர்ந்த கன்னியப்பன் - இன்பா ஆகியோரின் மகள் க.அருள்மொழி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ''தந்தை பெரியாரின் இயக்கம் என்ன செய்தது என்பதற்கு இந்த இணையேற்பே சாட்சி. எந்தச் சடங்கும் இல்லாமல் புரோகிதரைத் தேடாமல் எளிமையாக இந்தத் திருமணம் நடைபெற்றிருக்கிறது'' என்று உரையாற்றினார்.
கழக இளைஞரணித் தோழர் மறைந்த கோ.ஜெயவீரகுமார் படத்தினைத் திறந்து வைத்தார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். புதுவை கோ.குமார் மூடநம்பிக்கை ஒழிப்பு - மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்திக் காட்டி, கழகக் கொள்கைப் பாடல்களைப் பாடினார்.
உளுந்தூர்பேட்டை நகர் மன்ற தலைவர் கே. திருநாவுக்கரசு மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் வெங்கடேசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
திமுக ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், திமுக கிளைச் செயலாளர் சரண்ராஜ், காங்கிரஸ் வட்டார செயலாளர் ராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொறுப்பாளர்கள், திமுக கிளைச் செயலாளர் பழனி, திமுக மேலவை பிரதிநிதி ராதிகா ரஜினி, காங்கிரஸ் வட்டார துணைத் தலைவர் ஜானகிராமன், திமுக மாவட்ட பிரதிநிதி சம்பத், திமுக பிரதிநிதி பேபி முருகானந்தம், திமுக கிளைச் செயலாளர் உதயகுமார், மேலவை பிரதிநிதி செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பங்கேற்றோர்
கூட்டத்தில் கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் சுப்புராயன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுந்தரராசன் பிற மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட அமைப்பாளர் தா.பெரியசாமி, கடலூர் மாவட்ட தலைவர் கோதண்டபாணி, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விழுப்புரம் ப.க. செயலாளர் கார்வண்ணன், விழுப்புரம் நகர தலைவர் பூங்கான் விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் எழிலரசன், கடலூர் மாவட்ட ப.க தலைவர் தமிழன்பன், கடலூர் மாவட்ட செயாளர் பெரியார் செல்வம், உளுந்தூர்பேட்டை ஒன்றிய தலைவர் சக்திவேல், மாவட்ட துணைச் செயலாளர் முத்து, திண்டிவனம் மாவட்ட தலைவர் அன்பழகன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் பரந்தாமன், திண்டிவனம் கழக மாவட்ட துணை செயலாளர் வில்லவன் கோதை. திண்டிவனம் பக தலைவர் ஏழுமலை, ப.க ஜானகிராமன், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ் விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் பகலவன் குணா.விக்னேஷ், கடலூர் மண்டல மாணவரணிச் செயலாளர் பண்பாளன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,
திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், விருத்தாச்சலம் மாவட்ட இளைஞரணி தலைவர் சிலம்பரசன், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தினேஷ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கிருஷ்ண பாண்டியன், திருநாவலூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், சங்கீதா, களத்தூர் ஸ்ரீதரன், களத்தூர் பழனிராஜ், களத்தூர் வரதராஜன், களத்தூர் அரவிந்த், புலவர் இராவணன்,
வேகாக்கொல்லைமாணிக்கவேல், டிஜிட்டல் ராமநாதன், வேப்பூர் வட்டாரத் தலைவர் பழனிச்சாமி, விருத்தாசலம் நகரச் செயலாளர் சேகர், மாணவர் கழகத் தலைவர் இராமராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல் நாள் விராலிமலையில் பொதுக்கூட்டம்; அடுத்த நாள் தமிழ்நாட்டின் முக்கியமான மாநகராட்சியாம் மதுரை மாநகரில் கூட்டம். அதற்கு அடுத்த நாள் வட மாவட்டத்தில் எளிமையான சிற்றூர்களில் கழகக் கொடியேற்றம், கூட்டம் என கழகத் தலைவரின் பயணம் அமைந்திருந்ததை அறிந்த ஊர்ப் பொதுமக்கள் பெருவியப்புடன் தமிழர் தலைவரிடம் தங்கள் அன்பை வெளிப்படுத்தியதைக் காண முடிந்தது.
No comments:
Post a Comment