மாநில உரிமை! ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை ஒன்றிய, மாநில அரசை கட்டுப்படுத்தாது உச்ச நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 19, 2022

மாநில உரிமை! ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை ஒன்றிய, மாநில அரசை கட்டுப்படுத்தாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 19 ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப் படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்பதன் சுருக்கம் தான் ஜிஎஸ்டி வரி ஆகும்.

இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள் வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்புகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் பரிந்துரை செய்யும்.  ஒன்றிய, மாநில அரசுகள் இந்த பரிந்துரைகளை மேற்கொள்ளும். இந்த நிலையில்தான் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு களுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு  இன்று முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதி காரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்த முடியாது.இந்தியா ஒரு கூட்டாச்சி ஒன்றியம் என்பதால் ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை.

ஜிஎஸ்டி தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்ற ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் என்பது கூட்டு ஆலோசனை யின் படியே முடிவுகள் எடுக்கப்படும். இந்தியா கூட்டாட்சித் தத்துவம் கொண்ட நாடு என்பதால், ஒரு அமைப்பு மட்டும் கூடுதல் அதிகாரம் கொண்டு இருக்க முடியாது.அது கூட்டாச்சித் தத்துவத்தை குலைக்கும். இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால் ஒன்றிய , மாநில அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆக்கபூர்வமான ஆலோசனையில் ஈடுபட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்திற்கு இதுதான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மாநில உரிமைகளை நிலைநாட்டும் முக்கியமான தீர்ப்பை வழங்கி உள்ளது உச்ச நீதிமன்றம்.


No comments:

Post a Comment