நீதிமன்றத்தை மிரட்டும் ஒன்றிய அமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

நீதிமன்றத்தை மிரட்டும் ஒன்றிய அமைச்சர்

புதுடில்லி,மே 12- நீதிமன்றங்களை மதிக்கி றோம். அதேநேரம் ''லட்சுமண கோட்டை'' மதிக்கவேண்டும் என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

தேசத் துரோக சட்டப்பிரிவை (124ஏ) ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதாக ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனினும், இந்த சட்டப்பிரிவின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் புதிதாக வழக்கு பதிவு செய்யவும், ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையை தொடரவும், நடவடிக்கை எடுக்கவும் இடைக்கால தடை விதித்து நேற்று (11.5.2022) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறும்போது, “தேசத் துரோக சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தலை மையிலான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை தெளிவாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட் டோம். நீதிமன்றங்களையும் அதன் சுதந் திரத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் ''லட்சுமண ரேகை'' என்ற ஒரு கோடு உள்ளது. அதை நாட்டின் அனைத்து அமைப்புகளும் மதிக்க வேண்டும்.

நமது அரசியல் சாசனம் நாட்டின் 3 முக்கிய அமைப்புகளுக்கும் தனி அதி காரத்தை வழங்கியுள்ளது. இந்த மூன்று அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல் பட்டால் ஜனநாயகம் வலுவடையும். ஒவ் வொரு அமைப்பும் தனது பணியை செய் யும்போது, ''லட்சுமண ரேகையை'' மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment