லண்டன், மே 12 4 ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
கரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதன் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒன்று போடப்படுகிறது. ஆனால், இங்கிலாந்தில் 3 ஆவது பூஸ்டர் டோஸ் மட்டுமின்றி, வசந்த காலத்தையொட்டி 4 ஆவது பூஸ்டர் டோசும் போடப்படுகிறது. இது அதிக பாதிப்புக்கு ஆளாகிற நிலையில் உள்ளவர் களுக்கு போடப்படுகிறது. அதிகளவு நோய் எதிர்ப்புச்சக்தியை பராமரிப்பதற்காக இந்த 4 ஆவது டோஸ், முன் எச்சரிக்கை உத்தியாக அங்கு பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் 4 ஆவது டோஸ் தடுப்பூசி யாக (அதாவது, 2 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப் பூசியாக) பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறபோது, அது வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment