தாஜ்மகால்மீது அடுத்த குறி! பா.ஜ.க. எம்பி தியா குமாரி முனைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 12, 2022

தாஜ்மகால்மீது அடுத்த குறி! பா.ஜ.க. எம்பி தியா குமாரி முனைவு

ஜெய்ப்பூர், மே12- தாஜ்மகால் அமைந்துள்ள இடம் முன்பு அரச குடும்பத்திற்கு சொந்த மாக இருந்தது என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்துள்ளார் 

உத்தரப்பிரதேச மாநிலத் தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வை யிட்டு செல்லும் இடம். உல கின் முக்கியமான இடங் களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினை வாக கட்டிய மகால் இது. 17 ஆம் நூற்றாண்டில் கட்டப் பட்டதாக வரலாறு. இந்தியா வுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் இங்கு சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

வரலாறு இப்படி இருக்க தாஜ்மகாலில் திறக்கப்படா மல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மய்யத்திற்கு உத்தர விடக் கோரிய மனுவை அல காபாத் உயர்நீதிமன்றம் விசா ரணைக்கு ஏற்றுக் கொண் டது. இந்நிலையில், தாஜ் மகால் அமைந்துள்ள நிலம் தங்கள் குடும்ப சொத்து என தெரிவித்துள்ளார் பாஜக எம்.பி. தியா குமாரி.

"தாஜ்மகால் அமைந் துள்ள இடத்தில் எங்களது நிலமும் இருந்தது. தனி நபர்களிடம் உள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது அதற்கான தொகையை வழங்குவது வழக்கம். அதுபோல அப் போது அந்த நிலப்பரப்பை ஆண்ட அரசன் இழப்பீடு தொகையை வழங்கியதாக நான் கேள்விப்பட்டேன். இருந்தாலும் அதை எதிர்த்து யாராலும் அப்போது குரல் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அப்போது அவர் கள் ஆட்சியில் இருந்தார்கள். அந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணம் கூட எங்களிடம் உள்ளது. அது ஜெய்ப்பூர் ராஜவம்சத்தின் பதிவேடு களுக்கான அறையில் பத் திரமாக வைக்கப்பட்டுள் ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை தர நாங்கள் தயார். அந்த நிலத்தை ஷாஜகான் கைய கப்படுத்தியதற்கான ஆதா ரம் உள்ளது. அதனை நான் இன்னும் முழுவதுமாக பார்க்கவில்லை.

அதற்காக நான் தாஜ் மகால் இடிக்கப்பட வேண் டும் என சொல்லவில்லை. ஆனால், அங்கு பூட்டப்பட் டுள்ள அறைகளில் என்ன உள்ளது என்பது அனை வருக்கும் தெரிந்தாக வேண் டும். அந்த அறைகளின் கதவுகளைத் திறந்தால் உண்மை வெளிவரும்" என தெரிவித் துள்ளார் அவர்.

No comments:

Post a Comment