வன்முறையைத் தூண்டும் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்னேரி காவல் நிலையத்தில், பொன்னேரி நகர திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.பொன்னேரி நகர தலைவர் வே.அருள் புகார் அளித்தார், உடன் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் கெ.முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கார்த்திகேயன், மாவட்ட மாணவர் கழகத் தலை வர் நீ.குணசேகரன் ஆகியோர் உள்ளனர்.
மனிதனை மனிதன் சுமக்கும் ஆதினங்களின் பட்டின பிரவேசத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடமாட முடியாது என்று சொன்ன மன்னார்குடி பார்ப்பன மடாதிபதி ஜீயரைக் கைது செய்ய வலியுறுத்தி மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் தலைமையில் தென்காசி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.


No comments:
Post a Comment