டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
கருநாடக மாநில முதலமைச்சர் பதவியை பணம் கொடுத்து பசவராஜ் பொம்மை பெற்றுள்ளார், காங்கிரஸ் தலைவர் சித்தராமைய்யா தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
'இந்தி திணிப்பு' இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சி. இந்தி வெறியர்கள் வாழ்க்கையின் ஒரு அடிப்படை உண் மையை உணரவில்லை. வெறியுணர்வு அதன் தாக்கத்தில் எதிர்மறையானது என மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜி.எஸ்.ஜார்ஜ் கருத்து.
தமிழ்நாடு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போக்கு வரத்து தொழிலாளர் கூட்டமைப்பு வேண்டுகோள்.
தி டெலிகிராப்:
செப்டம்பர் 2018 முதல் செப்டம்பர் 2019 க்கு இடைப் பட்ட ஒரு ஆண்டில், நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 51,000 அல்லது 4.78 சதவீதம் குறைந்துள்ள தாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 11,739 அல்லது 3.6 சதவீதம் உயர்ந்துள்ளது..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment