முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை திரும்பப் பெற்ற பஞ்சாப் அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை திரும்பப் பெற்ற பஞ்சாப் அரசு

ஜலந்தர், மே.30- பஞ்சாபில் மேனாள் அமைச்சர்கள் உட்பட 424முக்கிய பிர முகர்களுக்கு  பல ஆண்டு களாக வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை அம் மாநில அரசு திரும்பப் பெற்றிருக்கிறது.

பஞ்சாபில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஆளும் காங்கிரசை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி ஆட் சியை பிடித்தது. முதல மைச்சராக பகவந்த் மன் பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார். ஆம் ஆத்மி அரசு அமைந்தது முதலாக பஞ்சாபில் பல அதிரடி நிர்வாக மாற்றங் கள் அமலாகி வருகின்றன. அந்த வகையில், விஅய்பி கலாச்சாரத்தை ஒழிப்பதி லும் பஞ்சாப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.அதன்படி, கடந்த இரண்டு மாதங்களில் மேனாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 306 வி அய்பிக்களின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு அளித்த போதி லும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (28.5.2022) 424 விஅய்பிக ளுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு அதிரடியாக ரத்து செய்தது. பாது காப்பு திரும்பப் பெறப் பட்ட விஅய்பிக்களில் மேனாள் அமைச்சர்கள், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சீக்கிய அமைப்புகளின் தலைவர் கள் உள்ளிட்டோர் அடங்குவர்.இதுகுறித்து முதலமைச்சர் பகவந்த் மன் விடுத்துள்ள அறிக் கையில், “பொதுமக்களின் தேவைக்காகவே பணிய மர்த்தப்பட்டுள்ளனர். விஅய்பிக்களுக்கு பாது காப்பு வழங்குவதற்காக அல்ல. தற்போது 424 விஅய்பிக்களின் பாது காப்பு திரும்பப் பெற்றி ருப்பதால் 400-க்கும் மேற் பட்ட காவல்துறையினர் காவல் நிலைய பணிக ளுக்கு திரும்பியுள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment