மராட்டியத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

மராட்டியத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிப்பு

புதுடில்லி, மே 30-  மராட்டி யத்தில் முதல் முறையாக புதிய வகை ஒமைக்ரான் தொற்றால் 7 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். மும்பை, தென்னாப்பி ரிக்கா உள்ளிட்ட நாடுக ளில் கடந்த மாதம் ஒமைக் ரான் புதிய வகை மாறு பாடுகள் கொண்ட தொற் றால் பலர் பாதிக்கப்பட் டனர். 

இந்த நிலையில் புதிய வகை ஒமைக்ரான் தொற் றால் மராட்டியத்தில் முதல் முறையாக 7 பேர் பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் 18ஆம் தேதி இடையே மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததில் ஒமைக்ரான் பி.ஏ.4 வகை மாறுபாட் டால் 4 பேரும், பி.ஏ.5 வகை மாறுபாட்டால் 3 பேரும் பாதிக்கப்பட்ட னர் என மாநில சுகா தாரத்துறை அதிகாரி ஒரு வர் தெரிவித்தார். 

புதிய வகை மாறு பாட்டால் பாதிக்கப்பட் டவர்களில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல் ஜியம் சென்று திரும்பி யவர்கள். 3 பேர் கேரளா, கருநாடகா பயணித்துள் ளனர். மற்றவர்கள் வேறு எங்கும் செல்லாதவர்கள்.

No comments:

Post a Comment