இந்தியாவில் முதல் முறையாக டிரோன் மூலமாக அஞ்சல் பட்டுவாடா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

இந்தியாவில் முதல் முறையாக டிரோன் மூலமாக அஞ்சல் பட்டுவாடா

அகமதாபாத், மே 30- இந்தியாவி லேயே  முதல்முறையாக குஜராத் மாநிலத்தில் டிரோன்கள் மூலமாக  அஞ்சல்கள் பட்டுவாடா செய்யப்பட்டது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத் தின் புஜ் தாலுகா ஹபாய் கிராமத்தில் இருந்து பச் சாவ் தாலுகாவில் உள்ள  நெர் என்ற கிராமத்துக்கு டிரோன் மூலம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டன. 

மொத்தம் 46 கிமீ தூரத்தை வெறும் 25 நிமிடத்தில் டிரோன் சென்றடைந்தது. ஒன்றிய அரசின் தகவல் தொடர் புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி டிரோன் மூலம் அஞ்சல் அனுப்பும் திட்டம் சோதனை அடிப்படை யில் மேற்கொள்ளப்பட் டது. இது குறித்து  தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘நவீன தொழில்நுட்ப மாற்றங் கள் ஏற்பட்டு வரும் இந்த காலக் கட்டத்தில்  டிரோன் கள் உதவியுடன் அஞ்சல் பட்டுவாடா சேவை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. டிரோன் மூலம் மருத்துவ பார்சல் அனுப் பும்போது, அஞ்சலும் சேர்த்து அனுப்பி வைக் கப்பட்டது. 

இந்த சோதனை முயற்சி வர்த்தக ரீதியாக பலனை தந்தால், தொலை தூர பகுதிகளுக்கு டிரோன் கள் மூலம் அஞ்சல்  சேவை விரைவில் தொடங்கப் படும்,’’ என்றார்.

No comments:

Post a Comment