சென்னை,மே12- காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தொடர்பாக, தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம்,மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று (11.5.2022) நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல் ஜூன் 10ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பான வரைவு அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய் வழங்கி உள்ளார்.
தேர்தலைப் பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங் கானா, மகாராட்டிரா மாநிலங்களில் இருந்து பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் மீண்டும் உருவாக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி அளவில் இருந்து, தேசிய அளவிலான பொறுப்பு வரை தேர்தல் மூலம் நிரப்பப்படும்.
தமிழ்நாடு காங்கிரஸில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். மாநிலத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள்அன்றைய தினமே அறிவிக்கப்படும். மாநிலத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தேர்தல் அதிகாரியும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவருமான கவுரவ் கோகாய் பேசும்போது, ‘‘நாடு முழுவதும் கட்சிக்கு புத்துயிரூட்ட உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அளவில் இருந்து காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்த உள்ளோம். 2024 மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன’’ என்றார்.

No comments:
Post a Comment